Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Entertainment News Live Updates: கூலி படத்தில் வன்முறை காட்சிகள்.. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்

Entertainment News in Tamil, 2nd August 2025, Live Updates: லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் பான் இந்திய மொழி திரைப்படமாக உருவாகியிருப்பது கூலி. இந்த திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளது பற்றி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஓபனாக பேசி உள்ளார்.

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 02 Aug 2025 15:21 PM
Share
Entertainment News Live Updates: கூலி படத்தில் வன்முறை காட்சிகள்.. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கூலி படம் குறித்து லோகேஷ் பேச்சு

LIVE NEWS & UPDATES

  • 02 Aug 2025 03:21 PM (IST)

    கூலி இசை வெளியீட்டு விழா – பிரம்மாண்டமாக தயாராகும் நேரு ஸ்டேடியம்

    ரஜினிகாந்த்தின் கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் ஆகஸ்ட் 2, 2025 அன்று மாலை பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் நேரு ஸ்டேடியத்தில் கூலி பட போஸ்டர்கள், கட் அவுட்கள் என களைகட்டியிருக்கிறது. இதற்கான வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    பிரம்மாண்டமாக தயாராகும் நேரு ஸ்டேடியம்

     

  • 02 Aug 2025 03:02 PM (IST)

    சாட் ஜிபிடி உதவியுடன் பாடலுக்கு இசையமைத்த அனிருத்

    கூலி படம் தொடர்பாக இசையமைப்பாளர் அனிருத் அளித்த பேட்டி ஒன்றில் தான் சாட்ஜிபிடி பயன்படுத்தி இசையமைத்ததாக கூறியுள்ளார். அந்த பேட்டியில், ஒரு பாடலுக்கு இசையமைத்துக்கொண்டிருந்தபோது இரண்டு வரிகளுக்கு இசை கிடைக்கவில்லை. உடனடியாக சாட்ஜிபிடியில் நான் இசையமைத்த பாடலை அப்லோடு செய்து 2 வரிகளை கேட்டேன். அதற்கு சாட் ஜிபிடி, பத்து வரிகளைக் கொடுத்தது என்றார். இந்த தகவல் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

  • 02 Aug 2025 02:47 PM (IST)

    என்னுடைய டைரக்டர் அட்லி… – அல்லு அர்ஜூன் வாழ்த்து!

    அட்லி இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ஜவான் படத்துக்காக சிறந்த நடிகருக்கான  தேசிய விருது நடிகர் ஷாருக்கானுக்கு அறிவிக்கப்பட்டது. இது குறித்து வாழ்த்து தெரிவித்த நடிகர் அல்லு அர்ஜுன், ஜவான் படத்துக்காக தேசிய விருது வென்ற ஷாருக்கானுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அவரது 33 வருட சினிமா வாழ்க்கைக்கு சிறந்த கௌரவம் இந்த தேசிய விருது. மேலும் இந்த மேஜிக்கை நிகழ்த்தி காட்டிய என் இயக்குநர் அட்லீ சாருக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

  • 02 Aug 2025 02:30 PM (IST)

    ‘கூலி’ இசை வெளியீட்டு விழா – சென்னை வந்த ஆமிர் கான் – வைரலாகும் வீடியோ

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் முதன்மை வேடத்தில் நடித்துள்ள கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2, 2025 அன்று மாலை சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் இந்த விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் சென்னை வந்நதடைந்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    ஆமிர் கான் வீடியோவைப் பகிர்ந்த சன் பிக்சர்ஸ்

     

  • 02 Aug 2025 02:19 PM (IST)

    தேசிய விருது பெற்றவர்களுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து

    75வது தேசிய விருதுகள் ஆகஸ்ட் 1, 2025 அன்று அறிவிக்கப்பட்டது. தமிழில் பார்க்கிங் திரைப்படம் சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர், சிறந்த தமிழ் படம் ஆகிய 3 விருதுகளை அள்ளியது. சிறந்த இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் தேசிய விருதுகளுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தேசிய விருது பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனுஷ் வெளியிட்ட பதிவு

     

  • 02 Aug 2025 01:40 PM (IST)

    ஹோட்டல் அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பிரபல மலையாள நடிகர்

    பிரபல மலையாள நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கலாபவன் நவாஸ் ஹோட்டல் அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

  • 02 Aug 2025 01:20 PM (IST)

    சொந்த வீடு இல்லாததால் காதல் நிராகரிப்பு – கலங்கிய தர்ஷன்

    கனா படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷன் தற்போது ஹவுஸ்மேட்ஸ் படத்தில் நடித்துள்ளார். இந்த இரண்டு படத்தையும் நடிகர் சிவகார்த்திகேயன் தான் தயாரித்துள்ளார். இப்படியான நிலையில் நிஜ வாழ்க்கையில் தனக்கு சொந்த வீடு இல்லாததால் காதல் நிராகரிக்கப்பட்டதாக தர்ஷன் தெரிவித்துள்ளார்.

  • 02 Aug 2025 01:00 PM (IST)

    Parandhu Po OTT Release: பறந்து போ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

    இயக்குநர் ராமின் இயக்கத்தில் சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி உள்ளிட்ட பலரும் நடித்த படம் பறந்து போ. இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 02 Aug 2025 12:40 PM (IST)

    கவனம் முழுக்க சின்னத்திரை.. சினிமாவில் நடிக்காதது பற்றி தேவிப்பிரியா வருத்தம்!

    தனது கவனம் முழுக்க சின்னத்திரையில் மட்டுமே இருந்ததால் பெரிய திரையில் ஜொலிக்க முடியவில்லை என பிரபல நடிகை தேவிப்பிரியா தெரிவித்துள்ளார். தேவதர்ஷினி போன்றோர் சரியான நேரத்தில் வாய்ப்புகளை பயன்படுத்தினார்கள். அந்த நேரத்தில் நான் அப்படி செய்ததில் வருத்தம் இருப்பதாகவும் தேவிப்பிரியா கூறியுள்ளார்.

  • 02 Aug 2025 12:20 PM (IST)

    ஹவுஸ்மேட்ஸ் படம் பார்த்த இயக்குநர் ஹெச்.வினோத்.. படக்குழுவினருக்கு பாராட்டு

    இயக்குநர் ஹெச்.வினோத் ஹவுஸ்மேட்ஸ் படத்தை தியேட்டரில் பார்த்து படக்குழுவினரை பாராட்டியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இப்படத்தை ராஜவேல் இயக்கியுள்ளார். தர்ஷன் இப்படத்தின் ஹீரோவாகவும், காளி வெங்கட் முக்கிய கேரக்டரிலும் நடித்துள்ளனர்.

  • 02 Aug 2025 12:20 PM (IST)

    ஜனநாயகன் படத்தில் என்னுடைய கேரக்டர் இதுதான்.. நடிகர் நரேன் ஓபன் டாக்!

    ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் கடைசிப்படம் என்ற அறிவிப்போடு வெளியாகவுள்ள ஜனநாயகன் படத்தில் தான் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக நடிகர் நரேன் கூறியுள்ளார். இந்த படத்தில் தான் ஒரு விஞ்ஞானியாக வருவேன், கெஸ்ட் ரோல் என்றாலும் மிக முக்கியமான கேரக்டர் என அவர் கூறியுள்ளார்.

  • 02 Aug 2025 11:40 AM (IST)

    முதல்முறையாக தேசிய விருது.. அட்லீக்கு நன்றி தெரிவித்து ஷாருக்கான் வெளியிட்ட வீடியோ!

    பாலிவுட் சினிமாவின் பாட்ஷா என அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான் தனது திரையுலக வாழ்க்கையில் முதல்முறையாக தேசிய விருது வென்றுள்ளார். இதனால் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    ஷாருக்கான் வீடியோ

  • 02 Aug 2025 11:20 AM (IST)

    2வது முறையாக தேசிய விருது.. ஜிவி பிரகாஷ் படைத்த சாதனை!

    சூரரைப்போற்று படத்திற்கு பிறகு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷூக்கு 2வது முறையாக தேசிய விருது வாத்தி படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு பின் இசை மற்றும் பின்னணி இசை இரண்டிற்கு தேசிய விருது பெறும் சிறப்பை ஜி.வி.பிரகாஷ் பெற்றிருக்கிறார்.

  • 02 Aug 2025 11:00 AM (IST)

    கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் அபிநய் – ரசிகர்கள் வேண்டுகோள்!

    துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ரசிகர்களிடம் நன்கு பரீட்சையமான நடிகர் அபிநய் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவருக்கு நடிகர் கேபிஒய் பாலா உதவி செய்த வீடியோ வெளியான நிலையில் திரைத்துறையினர் உதவ வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

  • 02 Aug 2025 10:40 AM (IST)

    திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் – வைரமுத்து வேண்டுகோள்

    திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார். சுதந்திர தின உரையில் தான் என்ன பேச வேண்டும் என மோடி நாட்டு மக்களிடம் கேட்டிருந்த நிலையில் வைரமுத்து இதனை பதிவிட்டுள்ளார்.

  • 02 Aug 2025 10:20 AM (IST)

    ஜோ படத்தின் நடிகை மாளவிகா மனோஜின் தெலுங்கு படம் ஓடிடியில் ரிலீஸ்

    தமிழில் ஜோ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மாளவிகா மனோஜ். இவர் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். அவரின் முதல் படமான ஓ பாமா.. அய்யோ ராமா படம் தியேட்டரில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இப்படத்தை இடிவி வின் ஓடிடி தளத்தில் காணலாம்.

  • 02 Aug 2025 10:00 AM (IST)

    பகவந்த் கேசரி படத்துக்கு தேசிய விருது.. எதிர்பார்ப்பில் விஜய்யின் ஜனநாயகன்

    தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்துக்கு தெலுங்கு மொழியில் சிறந்த படத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்ட நிலையில் அப்படத்தில் இருந்து சில காட்சிகளை கொண்டு உருவாக்கப்பட்ட விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

  • 02 Aug 2025 09:40 AM (IST)

    நடிகர் சூர்யா படத்தில் இணையும் பவானி ஸ்ரீ.. எகிறும் எதிர்பார்ப்பு

    வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா, நடிகை மமிதா பைஜூ ஆகியோர் நடித்து வரும் படத்தில் நடிகை பவானி ஸ்ரீ முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே சூரி நடித்த விடுதலை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

  • 02 Aug 2025 09:20 AM (IST)

    தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தேசிய விருது – முதலமைச்சர் கடும் கண்டனம்

    71வது தேசிய விருது அறிவிப்பில் சிறந்த மலையாளப் படமாக தி கேரளா ஸ்டோரி தேர்வு செய்யப்பட்டதற்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கேரளாவுக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட படத்தை அங்கீகரித்து அம்மாநிலம் அவமதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

  • 02 Aug 2025 09:00 AM (IST)

    3 தேசிய விருதுகளை வென்ற பார்க்கிங் படம்.. கவனம் பெறும் ராம்குமார் பாலகிருஷ்ணன்!

    பார்க்கிங் படம் அதிகம் கவனம் ஈர்த்தவர்  இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இந்த படத்துக்கு சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் ஆகிய 3 பிரிவுகளில் தேசிய விருது கிடைத்துள்ளது. இதனால் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  • 02 Aug 2025 08:40 AM (IST)

    கூலி படத்தில் மோனிகா பாடல் எதற்கு? – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்

    கூலி படத்தில் இடம்பெற்ற மோனிகா பாடல் எதற்கு என்பதை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கமளித்துள்ளார். அதன்படி, வணிக நோக்கங்களுக்காக மட்டுமே இப்பாடல் வைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக என் படங்களில் இதுபோன்ற பாடல்கள் இருக்காது. இப்பாடல் கூலி படத்தின் கதையின் ஓட்டத்தை தடுக்காது எனவும் லோகேஷ் தெரிவித்துள்ளார்.

  • 02 Aug 2025 08:20 AM (IST)

    பிரமாண்டமாக நடைபெறப்போகும் கூலி படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா

    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கூலி படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

  • 02 Aug 2025 08:04 AM (IST)

    தேசிய விருது வென்ற எம்.எஸ்.பாஸ்கர் – நடிகர் பார்த்திபன் வாழ்த்து

    பார்க்கிங் படத்திற்காக தேசிய விருது வென்ற எம்.எஸ்.பாஸ்கருக்கு பன்முக கலைஞரான நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் வாழ்த்து தெரிவித்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர் தனது நெருங்கிய நண்பர் என்றும், உணவுக்கு வழியில்லாத காலத்தில் இருவரும் திறமையை வெளிப்படுத்த திணறிக் கொண்டிருந்தோம் என பழைய நினவுகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

  • 02 Aug 2025 01:20 AM (IST)

    சொந்த வீடு இல்லாததால் காதல் நிராகரிப்பு – நடிகர் தர்ஷன்

    தன்னுடைய வாழ்க்கையில் சொந்த வீடு இல்லாததால் காதல் நிராகரிக்கப்பட்டதாக குக் வித் கோமாளி புகழ் தர்ஷன் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 1ம் தேதி அவர் நடித்துள்ள ஹவுஸ்மேட்ஸ் படம் வெளியான நிலையில், அந்த படத்தின் கதை தன்னுடைய வாழ்க்கையில் நடந்தது போல இருந்ததாக தெரிவித்துள்ளார்.

2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழில் பார்க்கிங் படம் 3 பிரிவுகளில் விருது பெற்றுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான விருதை பெறுகிறார். அவரின் நடிப்புக்கு தற்போது தான் சரியான அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளது. அதேசமயம் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. கூலி படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 36 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி படம் ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறது. அமெரிக்காவில் வசித்து வரும் பாடகர் யேசுதாஸை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சந்தித்து உரையாடியுள்ளார். விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படம் வசூல் மழை பொழிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும் சினிமா பற்றிய தகவல்களை தெரிந்துக்கொள்ள 

Published On - Aug 02,2025 8:00 AM