Entertainment News Live Updates: வெற்றிமாறன் படத்தில் இருந்து விலகிய சிலம்பரசன்?
Entertainment News in Tamil, 29 July 2025, Live Updates: தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் வட சென்னை பட பின்னணியில் ஒரு படத்தை வெற்றிமாறன் இயக்கவிருந்தார். இந்தப் படத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து சம்பள பிரச்னை காரணமாக சிலம்பரசன் வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LIVE NEWS & UPDATES
-
தனுஷின் இட்லி கடை சுவாரசியமான படமாக இருக்கும் – ஜி.வி.பிரகாஷ் குமார்
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் இட்லி கடை படத்தில் தனுஷுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, இட்லி கடை படம் சுவாரசியமான படமாக வந்திருக்கிறது. தனுஷ் இயக்குநராகவும் நடிகராகவும் சிறப்பாக செய்திருக்கிறார். கிராமத்து பின்னணியில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. என்றார்.
-
சிவகார்த்திகேயனின் மதராஸி – அனிருத்துடன் கைகோர்க்கும் சாய் அபயங்கர்!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி திரைப்படம் வருகிற செப்டம்பர் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மினி வசந்த் நடித்துள்ளார். அனிருத் இசையில் இந்தப் படத்தின் முதல் பாடல் புரமோ வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை சாய் அபயங்கர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாண்டிராஜ் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி?
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள தலைவன் தலைவி திரைப்படம் 4 நாட்களில் ரூ.40 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகவும் வெளிநாடுகளில் மட்டும் இந்தப் படம் ரூ. 10 கோடி வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வெளியானது சிவகார்த்திகேயன் – ஏ.ஆர்.முருகதாஸின் மதராஸி பாடல் புரமோ!
ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வரும் படம் மதராஸி. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மினி வசந்த் நடிக்க, அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் பாடல் ஜூலை 31, 2025 மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இந்த நிலையில் இந்தப் பாடலுக்கான புரமோவை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
மதராஸி பாடல் புரமோவை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
Back with my brother @anirudhofficial❤️#Madharaasi first single #Salambala
On July 31st at 6 PM 🔥https://t.co/4sfz3zBoKH@ARMurugadoss #SuperSubu #SekharMaster pic.twitter.com/Ba9qo7BmSX— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 29, 2025
-
விஜய் தேவரகொண்டா ஹீரோவாக அறிமுகமான பெல்லி சூப்புலு வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவு
விஜய் தேவரகொண்டா ஹீரோவாக அறிமுகமான பெல்லி சூப்புலு திரைப்படம் வெளியாகி ஜூலை 29, 2025 அன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்க தருண் பாஸ்கர் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். ரூ.1 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருந்த இந்தப் படம் ரூ.30 கோடி வசூலித்திருந்தது. தமிழில் இந்தப் படம் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ஓ மணப்பெண்ணே என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டிருந்தது.
-
அடுத்த படத்தை துவங்கிய மணிரத்னம்
கமல்ஹாசன், சிலம்பரசன் உள்ளிட்டோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய தக் லைஃப் திரைப்படம் கடந்த ஜூன் 5, 2025 அன்று வெளியாகி எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. இந்த நிலையில் இயக்குநர் மணிரத்னம் கொடைக்கானலில் தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் முழுக்க முழுக்க ரொமான்டிக் படமாக உருவாகவிருக்கிறதாம்.
-
விஜய் சேதுபதியின் படத்துக்கு இசையமைக்கும் போக்கிரி பட இசையமைப்பாளரின் மகன்
நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கில் பிரபல இயக்குநர் பூரி ஜெகந்நாத் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க, நடிகை தபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் இந்தப் படத்துக்கு தமிழில் யூத், ஷாஜகான், போக்கிரி, சுறா போன்ற படங்களுக்கு இசையமைத்த மணிஷர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகர் இசையமைக்கவிருக்கிறார்.
-
சூரியின் மாமன் பட ஓடிடி அப்டேட்
சூரி நடிப்பில் பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த மே 16, 2025 அன்று வெளியான படம் மாமன். இந்தப் படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் வருகிற ஆகஸ்ட் 8, 2025 அன்று வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடிக்க, சுவாசிகா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
-
சிவகார்த்திகேயன் கூட நடிக்க ஆசை – ஹவுஸ்மேட்ஸ் பட நடிகை
சிவகார்த்திகேயன தயாரிப்பில் தர்ஷன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 1, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள படம் ஹவுஸ்மேட்ஸ். ராஜவேல் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் மலையாள நடிகை ஆர்சா சாந்தினி பைஜூ தமிழில் களமிறங்குகிறார். இந்த நிலையில் இவர் அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் உடன் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
-
3வது முறையாக இணையும் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா?
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இருவரும் 3வது முறையாக ஒரு படத்தில் இணைந்து நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை தெலுங்கு இயக்குநர் ராகுல் சங்கிரிடியன் இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
வெற்றிமாறன் படத்தில் இருந்து விலகிய சிலம்பரசன்?
விடுதலை 2 படத்துக்கு பிறகு இயக்குநர் வெற்றிமாறன், சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்குவதாக இருந்தது. இந்த நிலையில் எதிர்பாராத காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அதற்கு பதிலாக சிலம்பரசனை வைத்து புதிய படத்தை வெற்றிமாறன் துவங்கவிருந்தார். இந்த நிலையில் சம்பள பிரச்னை காரணமாக சிலம்பரசன் இந்தப் படத்தில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ரூ.100 கோடி வசூலை அள்ளிய ஹரிஹர வீரமல்லு
ஏ.எம்.ரத்னம் இயக்கத்தில் அவரது மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் உருவான படம் ஹரிஹர வீரமல்லு திரைப்படம். இந்தப் படத்தில் பவன் கல்யாண் ஹீரோவாக நடித்திருந்தார். கலவையான விமர்சஙன்களைப் பெற்ற இந்தப் படம் இதுவரை ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
‘கிங்டம்’ பழைய ரஜினி படம் மாதிரி இருக்கும் – விஜய் தேவரகொண்டா
கிங்டம் திரைப்படம் பழைய ரஜினி படம் மாதிரி இருக்கும் என விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பழைய ரஜினி சார் படம் மாதிரி, முழு ஆக்சன் படமாக இருக்கும் என்றார். கிங்டம் படம் வருகிற ஜூலை 31, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
-
தீண்டாமை ஒரு பாவச்செயல்…. – ஜி.வி.பிரகாஷ் குமார்
திருநெல்வேலி அருகே மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்தற்காக, கவின் என்ற இளைஞர், அந்த பெண்ணின் சகோதரரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில், தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம் தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல் என குறிப்பிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின எக்ஸ் பதிவு
தீண்டாமை ஒரு பாவச்செயல்
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்Rest in peace #kavinkumar pic.twitter.com/Qte30xNU4g
— G.V.Prakash Kumar (@gvprakash) July 29, 2025
-
ஹவுஸ்மேட்ஸ் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள்
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகர் தர்ஷன், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ஹவுஸ்மேட்ஸ். இந்தப் படத்தை ராஜவேல் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் பிரஸ் ஷோவில் இந்தப் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இதனையடுத்து இந்த ஆண்டின் மற்றொரு வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி – வெளிநாடுகளில் 4 நாட்களில் ரூ.10 கோடி வசூல்
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் இணைந்து நடித்த தலைவன் தலைவி திரைப்படம் கடந்த ஜூலை 25, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வசூலைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தப் படம் வெளிநாடுகளில் 4 நாட்களில் ரூ. 10 கோடி வசூலித்துள்ளதாக சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
-
கிங்டம் படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் அனிருத் – விஜய் தேவரகொண்டா பெருமிதம்
கௌதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்திருக்கும் கிங்டம் திரைப்படம் வருகிற ஜூலை 31, 2025 அன்று வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டார். அப்போது பேசிய விஜய் தேவரகொண்டா, அனிருத் இந்தப் படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார். அவர் இந்தப் படம் எனது கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்றார், என்று குறிப்பிட்டுள்ளார்.
-
மலையாளத்தில் அறிமுகமாகும் கதிர்!
மதயானைக் கூட்டம், பரியேறும் பெருமாள் போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் கதிர். தற்போது இவர் மலையாளத்தில் மீசா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகவிருக்கிறார். இந்தப் படத்தை விக்ருதி படத்தை இயக்கி எம்.சி.ஜோசஃப் இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் ஷைன் டாம் சாக்கோ, ஹக்கீம் ஷா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
-
குற்றம் குடிதல் 2 அறிவிப்பு
பிரம்மா இயக்கத்தில் கடந்த 2016 ஆண் ஆண்டு வெளியான படம் குற்றம் கடிதல் . தேசிய விருது வென்ற இந்தப் படத்தை ஜேஎஸ்கே புரொடக்சன்ஸ் சார்பாக, ஜே.சதிஷ்குமார் தயாரித்திருந்தார். இந்த நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம பாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் தயாரிப்பாளர் ஜே.சதிஷ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எஸ்.கே. ஜீவா இந்தப் படத்தை இயக்குகிறார்.
-
தி ராஜா சாப் படத்தில் சஞ்சய் தத் .. வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
பிரபாஸ் நடிக்கும் தி ராஜா சாப் படத்தின் அவரின் தாத்தா கேரக்டரில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். இதற்கான போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது.
-
Coolie Audio Launch: கூலி ஆடியோ வெளியீட்டு விழா.. முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கூலி. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
சட்டமும் நீதியும் வெப் தொடர்.. பாராட்டை அள்ளிய நர்மதா
பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் ஜீ5 ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் சட்டமும் நீதியும் வெப் தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நர்மதாவை, அதன் வெற்றி விழாவில் தயாரிப்பாளர் வெகுவாக பாராட்டி தள்ளியுள்ளார்.
-
உணவில் விஷம் வைத்து கொல்ல முயற்சி.. நடிகை தனுஸ்ரீ தத்தா குற்றச்சாட்டு
பிரபல பாலிவுட் நடிகையான தனுஸ்ரீ தத்தா, தன்னுடைய வீட்டில் குடும்பத்தினர் தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருவதாக சில தினங்களுக்கு முன் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இப்போது நான் உண்ணும் உணவில் விஷம் வைத்து கொல்ல முயற்சிப்பதாகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
-
கிங்டம் படத்தைப் பார்க்க ஆர்வமாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா
விஜய் தேவரகொண்டா நடிப்பில் ஜீலை 31ம் தேதி வெளியாகவுள்ள படம் கிங்டம். இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தானா படத்தைப் பார்க்க ஆர்வமாக இருப்பதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது திரையுலகில் பேசுபொருளாக மாறியுள்ளது.
-
Thalaivan Thalaivii: தலைவன் தலைவி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் படம் தலைவன் தலைவி. பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹீரோயினாக நித்யாமெனன் நடித்திருக்கிறார். இந்த படம் செப்டம்பர் முதல் வாரம் ஓடிடியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
-
கூலி படத்தின் முதல் காட்சி எப்போது தெரியுமா?
ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி உலகமெங்கும் ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவில் ஒருநாள் முன்னதாக ஆகஸ்ட் 13ம் தேதி மாலை 6.30 மணிக்கு ப்ரீமியர் காட்சி திரையிடப்படவுள்ளது. அங்கு டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
-
ஷாரூக்கானுக்கு இப்படி ஒரு நம்பிக்கையா? – என்னன்னு பாருங்க!
பாலிவுட் சினிமாவில் பாட்ஷா என அழைகப்படும் நடிகர் ஷாரூக்கானுக்கு அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இப்படியான நிலையில் தான் படத்தில் ஓடினால் அந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தனக்குள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
-
Madharaasi First Single: மதராஸி படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ இன்று வெளியீடு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் ஆகியோர் நடித்துள்ள மதராஸி படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Lokesh Kanagaraj: விஜய் இல்லாமல் LCU முழுமை பெறாது: லோகேஷ் கனகராஜ்!
விஜய் இல்லாமல் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் முழுமை பெறாது. அவர் மீண்டும் நடிப்பாரா என தெரியவில்லை. அவரின் தொலைநோக்கு பார்வை எதை நோக்கி உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
-
ராக் ஸ்டார் அனிருத்தின் இசை நிகழ்ச்சி.. டிக்கெட் விற்பனை பற்றி அறிவிப்பு!
ஜூலை 26ம் தேதி சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ராக் ஸ்டார் அனிருத்தின் இசை நிகழ்ச்சி பல்வேறு காரணங்களால் ஆகஸ்ட் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த முறை இசை நிகழ்ச்சி கூவத்தூரில் உள்ள சொர்ண பூமி என்ற இடத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பார்டர் 2 படத்தின் ஹீரோயினாக மேதா ராணா.. வருண் தவான் ரசிகர்கள் ஹேப்பி
வருண் தவான் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக பார்டர் 2 படத்தின் ஹீரோயினாக மேதா ராணாவை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இவர் வருண் தவானை விட 13 வயது இளையவராவர். அதேசமயம் மேதா ராணாவுக்கு இது மிகப்பெரிய முதல் பாலிவுட் வாய்ப்பாகும்.
-
Avatar Fire and Ash: ரசிகர்களை கவர்ந்த அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் ட்ரெய்லர்!
ஹாலிவுட்டில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் அவதார் படத்தின் 3ம் பாகமாக “அவதார் ஃபயர் அண்ட் ஆஷ்” ட்ரெய்லரானது ரிலீசாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, இந்த படம் 2025, டிசம்பர் 19ம் தேதி வெளியாகவுள்ளது.
-
3BHK படத்தில் இருந்து வெளியான கனவெல்லாம் பாடல் வீடியோ
சித்தார்த் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற 3BHK படத்தில் இருந்து கனவெல்லாம் பாடலின் வீடியோ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீகணேஷ் இயக்கிய இந்த படத்தில் தேவயானி, சரத்குமார், மீத்தா ரகுநாத் என பலரும் நடித்திருந்தனர்.
-
சூரி நடிக்கும் மாமன் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு
பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ராஜ்கிரண் என பலரும் நடித்த மாமன் படம் தியேட்டரில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது. இந்த படம் ஜீ5 ஓடிடி தளத்தில் 2025, ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விரைவில் சூர்யாவுடன் ஒரு படம்.. லோகேஷ் கனகராஜ் நம்பிக்கை
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சூர்யாவை வைத்து பணியாற்ற விரும்புகிறேன் என லோகேஷ் தெரிவித்துள்ளார்.
-
Ilaiyaraaja : இளையராஜா மனு தள்ளுபடி
காப்புரிமை தொடர்பாக, சோனி நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை மும்பை ஐகோர்ட்டில் இருந்து, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரிய இளையராஜா மனு தொடர்ந்தார். அந்த மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது
-
எதிர்பார்ப்புகளுடன் கூலி படம்
ரஜினிகாந்த்தின் கூலி படமானது உலகமெங்கும் வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், அமீர்கான், சவுபின் ஷாஹிர் என பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.
-
Coolive Movie : கூலி படத்திற்கு ஆரம்பமும் மற்றும் சரியான முடிவு
கூலி படத்திற்கு ஆரம்பமும் மற்றும் சரியான முடிவும் இருக்கிறது. ரஜினிகாந்த்துடன் அடுத்த திரைப்படம் கூலி 2 திரைப்படமாக இருக்காது, வேறு கதைக்களம் கொண்ட படமாக இருக்கும் என லோகேஷ் கூறியுள்ளார்
-
Rajinikanth Movie : ரஜினி படம் – லோகேஷ் சொன்னது என்ன?
கூலி படம் தொடர்பான புரொமோஷன் காரணமாக சமீபத்தில் கலந்துகொண்ட நேர்காணலில் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த்துடன் அடுத்த படத்தில் இணைவது பற்றி பேசியுள்ளார். அவர் அந்த நேர்காணலில் “கூலி 2 படம் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு, ஆனால் ரஜினிகாந்த்துடன் வேறு கதைக்களத்தில் படத்தில் இணைவேன்” எனக் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த்தின் (Rajinikanth) முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் கூலி (Coolie movie) படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதனால் ப்ரமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த படத்தின் இயக்குநர் லோகேஷ் பல முக்கிய விவரங்களை பகிர்ந்துகொண்டு வருகிறார்,இந்நிலையில் கூலி படம் தொடர்பான அப்டேகளை பார்க்கலாம். அடுத்து எதிபார்ப்புக்கு பஞ்சமில்லாத படமாக வெளியாகவுள்ளது கிங்டம். விஜ்ய தேவரகொண்டாவின் மாறுபட்ட நடிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. கௌதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் பாக்யஸ்ரீ போர்ஸ், சத்ய தேவ் உள்ளிட்டோர் நடிப்பில் வருகிற ஜூலை 31, 2025 அன்று ரிலீசாகவுள்ளது. அப்பம் தொடர்பான செய்திகளையும் உடனுக்குடன் செய்திகாக பார்க்கலாம். மேலும் புதுப்பட ரிலீஸ்கள் தொடர்பான செய்திகள், சினிமா அப்டேட்களை உடனுக்குடன் பார்க்கலாம்.
Published On - Jul 29,2025 8:02 AM