Dulquer Salmaan: கமல் படங்களை தவிர்த்த துல்கர் சல்மான்.. அப்புறம் என்னாச்சு தெரியுமா?

Dulquer Salmaan Rejects Kamals Films : மலையாளம் சினிமாவின் மூலம் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியவர் நடிகர் துல்கர் சல்மான். மலையாள நடிகர் மம்முட்டியின் மகனான இவர், தற்போது பான் இந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், கமலுடன் நடிக்க மறுத்து, அவர் கொடுத்த ஹிட் படங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

Dulquer Salmaan: கமல் படங்களை தவிர்த்த துல்கர் சல்மான்.. அப்புறம் என்னாச்சு தெரியுமா?

துல்கர் சல்மான் மற்றும் கமல்ஹாசன்

Published: 

07 Jun 2025 19:00 PM

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்மூட்டியின் (Mammootty) மகன்தான் நடிகர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan). இவர் தனது தந்தையைப் போலத் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகனாக நடித்து வருகிறார். மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார். மேலும் இந்தியிலும் சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இவர் இவர் மலையாளத்தில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான செகண்ட் ஷோ (Second Show) என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு ஓரளவு வரவேற்பைக் கொடுத்தது. இப்படங்களைத் தொடர்ந்த தமிழில் 2014ம் ஆண்டு வெளியான வாயை மூடி பேசவும் (Vaayai Moodi Pesavum)  என்ற நகைச்சுவை படத்தில் நடித்த அறிமுகமானார். ஆரம்பத்தில் காமெடி , காதல் போன்ற இடங்களில் நாயகனாக நடித்து மக்களைக் கவர்ந்தார். மேலும் தற்போது அதிரடி ஆக்ஷ்ன் வித்தியாசமான கதைக்களத்தில் நடித்த வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் லக்கி பாஸ்கர்.

இப்படத்தை வாத்தி படத்தை இயக்கிய இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து காந்தா, ஆகாசம் லோ ஓகேயா தாரா என்ற படத்திலும் மேலும் ஐயம் கேம் போன்ற இடங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்நிலையில், நடிக கமல்ஹாசனின் (Kamal Haasan) நடிப்பில் உருவாக்கிய தமிழ்ப் படங்களை ரிஜெக்ட் செய்து, நடிகர் துல்கர் சல்மான் கொடுத்த வெற்றிப் படங்கள் என்ன என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

துல்கர் சல்மானின் இன்ஸ்டாகிராம் பதிவு :

 

கமல் ஹாசனுடன் படங்களை ரிஜெக்ட் செய்து துல்கர் சல்மான் ஹிட் கொடுத்த படங்கள் :

நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன் 2. இயக்குநர் எஸ் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில், கமல்ஹாசனுடன் சித்தார்த் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் சித்தார்த் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் துல்கர் சல்மான்தான் தேர்வானாராம். அவர் அப்போது தெலுங்கில் இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் சீதா ராமன் படத்தில் நடித்துவந்த நிலையில், இந்தியன் 2 படத்தில் நடிக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் மணிரத்னம் இயக்கத்தில் மற்றும் கமல்ஹாசனின் எழுத்திலும் நடிப்பிலும் வெளியான படம்தான் தக் லைஃப். இந்த படமானது கடந்த 2025, ஜூன் 5ம் தேதியில் வெளியானது. இந்த படத்தில் சிலம்பரசன் நடித்துள்ள அமர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு துல்கர் சல்மான்தான் முதலில் தேர்வானாராம். பின் ஆவர் தெலுங்கில் இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் லக்கி பாஸ்கர் படத்தில் மும்முரமாக நடித்து வந்த நிலையில், இதில் நடிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. தக் லைஃப் படத்தில் துல்கர் சல்மான் இடம் பெற்றிருக்கும் என்ற அறிவிப்பு புகைப்படத்தை கூட, படக்குழு வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.