Sudha Kongara: ஜனநாயகனுடன் பராசக்தி போட்டியா? – இயக்குநர் சுதா கொங்கரா பதில்!

Parasakthi Movie Shooting Update : தமிழ் சினிமாவில் பெண் இயக்குநராக இருந்து பல ஹிட் படங்களை கொடுத்திருப்பவர் இயக்குநர் சுதா கொங்கரா. இவரின் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாகக் கதைக்களத்துடன், நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகிவரும் படம் பராசக்தி. இந்த படத்தின் ஷூட்டிங் அப்டேட் பற்றி அவர் பேசியுள்ளார்.

Sudha Kongara: ஜனநாயகனுடன் பராசக்தி போட்டியா? -  இயக்குநர் சுதா கொங்கரா பதில்!

ஜன நாயகன் மற்றும் பராசக்தி படங்கள்

Published: 

24 May 2025 11:59 AM

நடிகர் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) மதராஸி (Madharasi) படத்தைத் தொடர்ந்து, உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவரும் படம் பராசக்தி (Parasakthi). இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அதிரடி புரட்சி நாயகனாக நடித்து வருகிறார். இந்த படமானது தமிழகத்தைத் தொடர்ந்து, இலங்கையில் ஷூட்டிங் நடைபெற்றது. இயக்குநர் சுதா கொங்கராவின் (Sudha Kongara) இயக்கத்தில்  சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமாக, இந்த பராசக்தி உருவாகி வருகிறது. இந்த படத்தினை டான் பிக்ச்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனத்தின் கீழ் ஆகாஷ் பாஸ்கரன் (Akash Bhaskaran) தயாரித்து வருகிறார். மேலும் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடிகர்கள் அதர்வா, ரவி மோகன், ஸ்ரீ லீலா மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

நடிகர் ரவி மோகன் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் சுதா கொங்கரா படத்தின் ஷூட்டிங் அப்டேட்டை பெற்றுக் கூறியுள்ளார். மேலும் விஜய்யின் ஜன நாயகன் படத்துடன் , பராசக்தி மோதுகிறதா என்பது குறித்து பேசியுள்ளார். அதை பற்றி பார்க்கலாம்.

இயக்குநர் சுதா கொங்கரா கொடுத்த அப்டேட் :

சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சுதா கொங்கரா, “பராசக்தி படத்தின் ஷூட்டிங் நிறையவே முடித்துவிட்டோம், இன்னும் ஒரு 40 நாள் ஷூட்டிங் மட்டும் மீதமுள்ளது. மேலும் நடிகர் சிவகார்த்திகேயன், ஏ. ஆர் முருகதாஸின் மதராஸி பட ஷூட்டிங் முடித்தும் பராசக்தி பட ஷூட்டிங் மீண்டும் ஆரம்பித்துவிடும். மதராஸி பட ஷூட்டிங் விறுவிறுப்பாகி நடந்துவரும் நிலையில், அதைத் தொடர்ந்து பராசக்தி படத்தின் மீதமுள்ள ஷூட்டிங் நடைபெறும் என்று கூறினார்.

மேலும் பராசக்தி விஜய்யின் ஜன நாயகனுடன் ரிலீஸ் ஆகிறதா ? என்ற கேள்விக்கு, சுதா கொங்கரா, “பராசக்தி பட ரிலிஸ் தேதியை நான் முடிவெடுப்பது மட்டுமில்லாமல், தயாரிப்பாளரும் அதற்கான முடிவெடுக்கவேண்டும். விஜய்யின் ஜன நாயகன் படத்துடன், மோதுவதாக ஊடகங்கள்தான் பேசுகின்றன, நாங்கள் அவ்வாறு எதுவும் கூறவில்லையே என இயக்குநர் சுதா கொங்கரா கூறியுள்ளார். இந்த தகவலானது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

பராசக்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :

நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த பராசக்தி படமானது, இன்னும் 20 சதவீத ஷூட்டிங் மற்றும் மீதமுள்ளது. இந்த படமானது உண்மை சம்பவத்தை அடிப்படியாகக் கொண்டு வருவாகிவரும் நிலையில், சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படமானது வரும் 2026, பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் முன்னதாகவே நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து விஜய்யின் ஜன நாயகன் படத்துடன் மோதுகிறது என்றார் விஜய்யின் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். மேலும் இந்த பராசக்தி பட ரிலீஸ் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.