நடிகர் நானி அடுத்ததாக ஹாய் நானா பட இயக்குநருடன் இணைகிறாரா? வைரலாகும் தகவல்

Actor Nani Next Movie Update: நடிகர் நானி நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றப் படம் ஹிட் 3. இந்தப் படத்தை தொடர்ந்து நானி தற்போது தி பாரடைஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகின்றது.

நடிகர் நானி அடுத்ததாக ஹாய் நானா பட இயக்குநருடன் இணைகிறாரா? வைரலாகும் தகவல்

நடிகர் நானி

Published: 

21 Jun 2025 18:40 PM

நடிகர் நானி (Actor Nani) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ஹிட் 3. கடந்த மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் நானி தற்போது தி பாரடைஸ் (The Paradise) என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் வருகின்ற 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு முன்பே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த தி பாரடைஸ் படத்தை தொடர்ந்து நடிகர் நானி அடுத்ததாக ஹாய் நானா பட இயக்குநருடன் மீண்டும் இணைய உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது.

நானி நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஹாய் நானா படம்:

நடிகர் நானி நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஹாய் நானா. தெலுங்கு மொழியில் ரொமாண்டிக் ட்ராமாவாக உருவான இந்தப் படம் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தில் நடிகர் நானியின் ஜோடியாக நடிகை மிருணாள் தாக்கூர் நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் கியாரா கண்ணா, ஜெயராம் மற்றும் பிரியதர்ஷி புலிகொண்டா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. காதல், செண்டிமெண்ட் என்று உருவான இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.

இந்தப் படத்தை இயக்குநர் ஷௌரியுவ் எழுதி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் நானி மீண்டும் இயக்குநர் ஷௌரியுவ் உடன் இணைய உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் நானியின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் தி பாரடைஸ் படத்தின் எக்ஸ் தள பதிவு: