Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூர் பெயரில் உருவாகும் படம்.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

Operation Sindoor Movie : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதட்டம் இருந்து வரும் நிலையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பாலிவுட்டில் புதிய திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. நிக்கி விக்கி பக்னானி பிலிம்ஸ் மற்றும் தி கன்டென்ட் இன்ஜினியர் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூர் பெயரில் உருவாகும் படம்.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!
ஆபரேஷன் சிந்தூர் திரைப்படம்Image Source: Instagram
barath-murugan
Barath Murugan | Published: 10 May 2025 11:01 AM

இந்தியா  (India) நாடு தற்போது போர் பதட்டத்திலிருந்து வருகிறது. சில நாட்களாக இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு (India and Pakistan)  இடையே போர் நிலவி வருகிறது. இந்த சம்பவமானது உலக நாடுகளையே திரும்பி பார்க்கவைத்துள்ளது. இந்த போர் நடவடிக்கைக்கு இந்திய அரசு ஆப்ரேஷன் சிந்தூர் (Operation Sindoor)  என்று பெயரிட்டுள்ளது. இந்த போர் நடவடிக்கையானது பகல்ஹாமில் (Pahalgam) நடந்த தீவிரவாத தாக்குதலின் அடிப்படையில் தொடங்கப்பட்டது. அந்த தாக்குதலில் 22 பேர் உயிரிழந்த நிலையில், இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இந்த போரானது நாடு முழுக்க பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த பதட்டத்திற்கு மத்தியில் இந்த போரின் பெயரிலே பாலிவுட்டில் (Bollywood)  ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ புதிய படத்திற்கான முதல் பார்வை வெளியாகியுள்ளது.

இந்த படத்தை நிக்கி விக்கி பக்னானி பிலிம்ஸ்  (Nikki Vicky Paganani Films) நிறுவனமானது தயாரிக்கவுள்ளதாம். தற்போது இந்த போஸ்டர் வெளியாகி இணையத்தில் படு வைரலாகி வருகிறது. இந்த போஸ்டரில் பெண் ராணுவ அதிகாரி ஒருவர் நெற்றியில் குங்குமம் வைப்பதுபோல இருக்கிறது. ஒரு கையில் துப்பாக்கியுடன், ராணுவ உடையில் நெற்றியில் குங்குமம் வைப்பது போல இருக்கிறது. தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் பெரும் பரபரப்பையும், விமர்சனத்தையும் ஏற்படுத்த வருகிறது.

இணையத்தில் வைரலாகும் அந்த போஸ்டர் :

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ஆப்ரேஷன் சிந்தூர் என்று டைட்டிலை கொண்ட இந்த படத்தை நிக்கி விக்கி பக்னானி பிலிம்ஸ் மற்றும் தி கன்டென்ட் இன்ஜினியர் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளதாம். மேலும் இதன் காரணமாக இந்த படத்தின் முதல் பார்வையை இந்த படக்குழு இணைந்து வெளியிட்டுள்ளது. இந்த ஆப்ரேஷன் சிந்தூர் என்று டைட்டில் வைத்திருக்கும் இந்த திரைப்படமானது மிகவும் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாக்கவுள்ளதாம். இதை பிரபலம் உத்தம் மகேஸ்வரி இயக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை இவர் மிகவும் பிரம்மாண்டமாக மக்களுக்குக் கொண்டு வருவார் என்று கூறப்படுகிறது.

இந்த சிந்தூர் என்ற சொல் எதைக் குறிக்கிறது என்றால், பொதுவாக இந்துக்கள் கலாச்சாரத்தில் திருமணத்தில் பயன் படுத்தும் ஒரு முக்கியமானதாக இருப்பது குங்குமம், அதுதான் சிந்தூர் என்று அழைப்பார்கள். இந்த குடும்பத்தைத் திருமணமான பெண்கள் தங்களில் நெற்றி வகிடில் வைப்பார்கள். இந்நிலையில்தான் இந்த போர் கலவரத்திற்கு “ஆபரேஷன் சிந்தூர்” என்று பெயரை இந்திய அரசு வைத்திருக்கிறது.

இந்த டைட்டிலை படத்திற்காக வைப்பதற்கு பாலிவுட் சினிமாவில் கடும் போட்டி நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த டைட்டிலுக்கு பல் தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த தலைப்பைப் பயன்படுத்தி படத்தை இயக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நடந்து வரும் நிலையில், ஒரு டைட்டிலுக்காக பாலிவுட் சினிமேவ அடித்துக்கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியானது. இந்த ஆபரேஷன் சிந்தூர் படத்தின் நடிகர்கள் யார் என இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பான் இந்தியா ஸ்டார்.. சினிமாவில் 23 ஆண்டுகளைக் கடந்த தனுஷ்!
பான் இந்தியா ஸ்டார்.. சினிமாவில் 23 ஆண்டுகளைக் கடந்த தனுஷ்!...
விஜய் படத்துடன் களமிறங்கும் கார்த்தி படம்.. பின்னணி இதுதான்!
விஜய் படத்துடன் களமிறங்கும் கார்த்தி படம்.. பின்னணி இதுதான்!...
இனி முன்னேற்றம் தான்.. மகர ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!
இனி முன்னேற்றம் தான்.. மகர ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!...
ஜெய்சங்கரிடம் பேசிய அமெரிக்கா.. என்ன மேட்டர்?
ஜெய்சங்கரிடம் பேசிய அமெரிக்கா.. என்ன மேட்டர்?...
மணல் விளையாட்டு: குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் அற்புதக் கலை!
மணல் விளையாட்டு: குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் அற்புதக் கலை!...
பாகிஸ்தான் என்ற நாடு வரைப்படத்தில் இருக்காது - அண்ணாமலை காட்டம்..
பாகிஸ்தான் என்ற நாடு வரைப்படத்தில் இருக்காது - அண்ணாமலை காட்டம்.....
பாகிஸ்தான் தாக்குதல்... ராணுவ அதிகாரிகள் பரபரப்பு விளக்கம்!
பாகிஸ்தான் தாக்குதல்... ராணுவ அதிகாரிகள் பரபரப்பு விளக்கம்!...
கோடை காலத்தில் சிறுநீரக கல் உருவாகும் அபாயம் அதிகரிக்குமா?
கோடை காலத்தில் சிறுநீரக கல் உருவாகும் அபாயம் அதிகரிக்குமா?...
ஆபரேஷன் சிந்தூர் பெயரில் உருவாகும் படம்.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
ஆபரேஷன் சிந்தூர் பெயரில் உருவாகும் படம்.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!...
சனிப்பிரதோஷத்தில் இப்படி வழிபட்டால் பலன்கள் ஏராளம்!
சனிப்பிரதோஷத்தில் இப்படி வழிபட்டால் பலன்கள் ஏராளம்!...
இந்தியாவுக்கு ஆதரவு... பாகிஸ்தானுக்கு அட்வைஸ் கொடுத்த அமெரிக்கா
இந்தியாவுக்கு ஆதரவு... பாகிஸ்தானுக்கு அட்வைஸ் கொடுத்த அமெரிக்கா...