Sardar 2: விஜய் படத்துடன் களமிறங்கும் கார்த்தி படம்.. பின்னணி இதுதான்!
Sardar 2 Clashes With Jana Nayagan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் கார்த்தி. இவர் நடிகர் சிவகுமாரின் மகனும், சூர்யாவின் தம்பியும் ஆவார். இவரின் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாகத் தயாராகிவரும் படம் சர்தார் 2. இந்த படமானது 2026 தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், விஜய்யின் ஜன நாயகனுடன் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்தியின் (Karthi) நடிப்பில் இறுதியாக வெளியான படம் மெய்யழகன் (Meiyazhagan). இந்த படத்தை இயக்குநர் பிரேம் குமார் இயக்கியிருந்தார். இவர்தான் விஜய் சேதுபதி மற்றும் திரிஷாவின் 96 திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா போன்ற நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தை அடுத்ததாக நடிகர் கார்த்தி வா வாத்தியார் (Vaa Vathiyar) மற்றும் சர்தார் 2 (Sadar 2) போன்ற படங்களில் நடித்து வந்தார். இதில் இயக்குநர் பி.எஸ். மித்ரன் (P.S. Mithran) இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் சர்தார் 2. இந்த படமானது கடந்த 2022ம் ஆண்டு வெளியான சர்தார் 1 படத்தின் தொடர்ச்சி கதைக்களத்துடன் உருவாகிவருகிறது.
இந்த படத்தின் முதல் பார்வையும், படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. மேலும் இந்த படத்தின் ஷூட்டிங்கும் முழுமையாக கடந்த 2025, மார்ச் மாதத்தில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து இந்த திரைப்படமானது 2025ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையில் சூர்யாவின் (Suriya) , சூர்யா 45 திரைப்படமும் வெளியாகவுள்ள நிலையில், கார்த்தியின் சர்தார் 2 படத்தை வரும் 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிட பேசியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டியை முன்னிட்டுத்தான் விஜய்யின் இறுதி படமான ஜன நாயகனும் (Jana Nayagan) வெளியாகவுள்ள நிலையில், கார்த்தி விஜய் படத்துடன் மோதுகிறது என்ற தகவலானது இணையத்தில் புயலாகப் பரவி வருகிறது.
நடிகர் கார்த்தி வெளியிட்ட எக்ஸ் பதிவு :
SARDAR 2- the war beginshttps://t.co/l5G7Q0Fjz6 pic.twitter.com/SO83wKJzdN
— Karthi (@Karthi_Offl) March 31, 2025
நடிகர் கார்த்தியின் சர்தார் 2 படமானது மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. தற்போது இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷ்ன் பணிகள் சிறப்பாக நடந்துவரும் நிலையில் விரைவில் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் கார்த்தியுடன் நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், யோகி பாபு மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐவிஒய் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்து வருகின்றனர். மேலும் இசையமைப்பாளர் சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் முதல் பார்வை மற்றும் அறிமுக வீடியோ வெளியாகி, இந்த படத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டியிருந்தது என்றே கூறலாம்.
இந்த படமானது 2025 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருந்த நிலையில், சூர்யாவின் சூர்யா 45 படமும் தீபாவளியோடு வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக கார்த்தியின் இந்த சர்தார் 2 படமானது தீபாவளிக்கு முன் அல்லது 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.