Vimal: மீண்டும் காமெடி கதைக்களம்! நடிகர் விமலின் ‘தேசிங்கு ராஜா 2’ படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?
Desingu Raja 2 Release Update ; தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சில படங்களில் அங்கீகரிக்காத ரோலில் நடித்துவந்தவர் விமல். இவற்றின் நடிப்பில் பல் காமெடி படங்கள் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வகையில் தேசிங்கு ராஜா 2 திரைப்படமானது ரிலீசிற்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது.

கோலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநராக இருந்து வருபவர் எஸ் . எழில் (S. Ezhil) . இவரின் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் தேசிங்கு ராஜா (Desingu Raja ). இந்த திரைப்படத்தில் தமிழ் பிரபல நடிகர் விமல் (Actor Vimal) முக்கிய ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிந்து மாதவி (Bindu Madhavi) நடித்திருந்தார். முற்றிலும் காமெடி கதைக்களத்துடன் வெளியான இந்த படமானது , பெரும் வரவேற்பைப் பெற்று ஹிட்டானது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தையும் ((Desingu Raja 2) இயக்குநர் எஸ். எழில் இயக்க, நடிகர் விமல் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தைத் தயாரிப்பாளர் ரவிச்சந்திரனுடன் (Ravichandran ) , நடிகர் விமலும் இணைந்து தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் கதைக்களம் முதல் பாகத்தை போலவே முற்றிலும் காமெடி கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் விமலுடன், குக் வித் கோமாளி புகழ், சிங்கம் புலி, ரவி மரியா, ஹர்ஷிதா எனப் போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ரிலீசிற்கு தயாராகியுள்ள நிலையில், படக்குழு தேதியை வெளியிட்டுள்ளது. அதன்படி விமலின் தேசிங்கு ராஜா 2 படமானது வரும் 2025, ஜூலை 11ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாம்.
தேசிங்கு ராஜா 2 படக்குழு வெளியிட்ட அறிவிப்பு :
View this post on Instagram
நடிகர் விமலின் தேசிங்கு ராஜா 2 படத்தின் அறிவிப்பானது கடந்த 2024ம் ஆண்டில் வெளியானது. அதை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் பல்வேறு இடங்களில் மிகவும் விமர்சையாக நடந்து வந்தது . மேலும் இந்த படமானது பாகம் 1யை ஒப்பிடும்போது மிகவும் பிரம்மாண்ட பட்ஜெட்டிலும், மாறுபட்ட கதைக்களத்திலும் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. விமலின் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.
மேலும் நடிகர் விமல் திரைப்படங்களில் ஹீரோவாக நடிப்பதைத் தொடர்ந்து வெப் தொடரிலும் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான வெப் தொடர் ஓம் காளி ஜெய் காளி. இந்த படத்தை இயக்குநர் ராமு செல்லப்பா இயக்கியிருந்தார். இந்த தொடரானது தெய்வீகம் நிறைந்த, சஸ்பென்ஸ் கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. மேலும் இவரின் நடிப்பில் பரமசிவன் பாத்திமா மற்றும் பெல்லடோனா என்ற திரைப்படங்களும் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் விமலின் தேசிங்கு ராஜா 2 படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி ரசிகர்களைக் குஷி படுத்தியுள்ளது. இந்த படமானது வரும் 2025, ஜூலை 11ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. பாகம் 1யை போல நிச்சயமாக இந்த தேசிங்கு ராஜா 2 படமும் வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.