Dhanush: பான் இந்தியா ஸ்டார்.. சினிமாவில் 23 ஆண்டுகளைக் கடந்த நடிகர் தனுஷ்!
Dhanushs 23 Years Of Cinema : கோலிவுட் சினிமா மட்டுமில்லாமல் பான் இந்தியா வரைக்கும் மிக பிரபலமான நடிகராக இருந்து வருபவர் தனுஷ். இவர் தமிழில் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் படத்தின் நடித்து ஹீரோவாக அறிமுகமானார். அதை தொடர்ந்து பல முன்னணி திரைப்படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். இந்நிலையில் இவர் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி சுமார் 23 ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்துள்ளார்.

நடிகர் தனுஷ் (Dhanush) கடந்த 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை (Thulluvadho Ilamai) என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தாலும், டைட்டில் கார்டில் தன்னுடைய தந்தையான கஸ்தூரி ராஜா (Kasthuri Raja) பெயரை பயன்படுத்தியிருப்பார். இந்த படமானது மாறுபட்ட கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. தனுஷிற்கு முதல் படம் அந்த அளவிற்கு வரவேற்பைப் பெறாவிட்டாலும், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் நடித்து வந்தார். பின் இவருக்கு விமர்சனத்தையும், வரவேற்பையும் வழங்கிய சிறப்பான படமாக அமைந்தது காதல் கொண்டேன் (Kaadhal Kondein). இந்த அப்படத்தை தனுஷின் சகோதரரும், இயக்குனருமான செல்வராகவன் இயக்கியிருந்தார். இந்த படத்தின் தனுஷ் மாறுபட்ட தோற்றத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். இந்த படத்தின் வரவேற்பை தொடர்ந்துதான் தனுஷிற்கு மற்ற இயக்குநர்களுடன் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்தது.
அதன் பிறகு திருடா திருடி, புதுக்கோட்டையில் இருந்து சரவணன், சுள்ளான், தேவதையைக் கண்டேன், புதுப்பேட்டை போன்ற ஹிட் படங்களை கொடுத்தார். இந்நிலையில் இந்த படங்களைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த இவருக்குப் பாலிவுட் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புகள் தேடிவந்தன. அதன் காரணமாகக் கடந்த 2013ம் ஆண்டு இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ராஞ்சனா என்ற படத்தின் மூலம் இந்தியில் ஹீரோவாக அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து ஹாலிவுட் படங்களிலும் நடித்த ஆல்ரவுண்டராக மாறினார். இவர் நடிகர் மட்டுமில்லாமல், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் போன்ற பணிகளையும் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று 2025 , மே 10 தேதியுடன் நடிகர் தனுஷ் சினிமாவில் நுழைந்து 23 வருடங்கள் கடந்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் பல தயாரிப்பு நிறுவனங்கள் வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் தனுஷின் இட்லி கடை படத்தை தயாரித்துவரும் டான் பிக்ச்சர்ஸ் நிறுவனமும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
டான் பிக்ச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் பதிவு :
An actor who became an emotion❤️
A creator who became a legacy💯Celebrating 23 Years of @dhanushkraja #23YrsofRealmRulerDHANUSH pic.twitter.com/idQvrGvmX3
— DawnPictures (@DawnPicturesOff) May 10, 2025
நடிகர் தனுஷ், தமிழில் இட்லி கடை படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அவர் இயக்கி அதில் முன்னணி நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை அடுத்ததாகத் தமிழில் மற்றும் 3 படங்களில் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் டி55 படத்திலும், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் டி56 படத்திலும் மற்றும் இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
மேலும் தற்போது தனுஷ் இந்தியில் தேரே இஷ்க் மெய்ன் என்ற படத்தில் நடித்தது வருகிறார். இந்த படத்தை இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கி வருகிறார். இவர்தான் தனுஷின் ராஞ்சனா படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அந்த படத்தைத் தொடர்ந்து தேரே இஷ்க் மெய்ன் என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.
மேலும் தனுஷின் நடிப்பில் மட்டும் இந்த 2025ம் ஆண்டில் மூன்று படங்கள் வெளியாகவுள்ளது. தெலுங்கில் குபேரா திரைப்படம் வரும் 2025 ஜூன் 20ம் தேதியிலும், இட்லி கடை 2025 அக்டோபர் 1ம் தேதியிலும் மற்றும் தேரே இஷ்க் மெய்ன் 2025 நவம்பர் 20ம் தேதியிலும் வெளியாகும் என்று படக்குழுக்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.