Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ajith Kumar: மீண்டும் அதே கூட்டணி.. அஜித்தின் அடுத்தப்பட இயக்குநர்!

Ajith Kumar 64th Movie Update : தமிழ் சினிமாவை தொடர்ந்து கார் ரேஸ் மூலம் பான் இந்தியா அளவிற்கு மிகவும் பிரபலமானவர் நடிகர் அஜித் குமார். இவர் படங்களில் நடித்ததை அடுத்தாக கார் ரேஸிலும் கலக்கி வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகி வெற்றி பெற்ற படமாக குட் பேட் அக்லி அமைந்திருந்தது.

Ajith Kumar: மீண்டும் அதே கூட்டணி.. அஜித்தின் அடுத்தப்பட இயக்குநர்!
அஜித் குமார் Image Source: IMDb
barath-murugan
Barath Murugan | Published: 10 May 2025 09:33 AM

நடிகர் அஜித் குமாரின் (Ajith Kumar) நடிப்பில் இறுதியாக வெளியான படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran)  இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் வெளியான இந்தப் படமானது எதிர்பார்த்ததை விடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றிருந்தது என்றே கூறலாம். அந்த அளவிற்கு இந்த படமானது வரவேற்கப்பட்டது. இந்த படத்தில் அஜித்தின் மனைவியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்திருந்தார். இவர்களின் ஜோடியில் இந்தப் படமும் அருமையாக இருந்தது என்றே கூறலாம். இந்த படத்தைத் தொடர்ந்து  கார்த்திக் சுப்பராஜ், புஷ்கர் – காயத்ரி மற்றும் சிறுத்தை சிவா போன்ற இயக்குநர்கள் அஜித்தின் 64வது படத்தை இயக்கவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி வந்தது.

அதைத் தொடர்ந்து நடிகர் அஜித்தின் 64வது திரைப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்தான் இயக்கவுள்ளார் என்று புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை குட் பேட் அக்லி படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறதாம். மேலும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்தான் இசையமைக்கவுள்ளார் என்று புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தகவல்கள் தொடர்பாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஏற்கனவே, குட் பேட் அக்லி படத்தின் நிகழ்ச்சியில் பேசியிருந்தார். ஒருவேளை அவர் சொன்னது உண்மையானால் இந்த கூட்டணி மீண்டும் இணையும், எனவே இந்த தகவலும் உண்மையா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

குட் பேட் அக்லி படக்குழு வெளியிட்ட அறிவிப்பு :

நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படமானது தற்போதுவரை சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படமானது வெளியாகி 4 வாரங்களைக் கடந்த நிலையில் இதுவரை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சுமார் ரூ.250 கோடிகளைத் தாண்டி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தைத் தொடர்ந்த தனது 64வது படத்திலும் நடிகர் அஜித் குமார், குட் பேட் அக்லி திரைப்பட கூட்டணியுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் குமாருக்கென தமிழ் சினிமாவில் தனி மரியாதையும், ரசிகர்கள் கூட்டமும் இருக்கிறது. ஒரு காலத்தில் நடிகர் அஜித் மற்றும் விஜய் என்றால் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்படும். இந்நிலையில் நடிகர் விஜய் ஜன நாயகன் படத்தை தொடர்ந்து முழுவதுமாக அரசியலில் இறங்கவுள்ள நிரையில், இந்த போட்டி பொறாமை எல்லாம் அடங்கியுள்ளது என்றே கூறலாம். அந்த விதத்தில் நடிகர் அஜித் குமாரும் பல சாதனைகளையும் செய்துவருகிறார்.

இவர் படங்களில் நடிப்பதைத் தொடர்ந்து தனது விருப்பமான கார் ரேஸில் இறங்கியுள்ளார். இவர் இதுவரை இந்தியாவின் சார்பாக வெளிநாடுகளில் நடந்த போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றிருக்கிறார். இதுவரை கலந்துகொண்ட 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த பெருமையைப் பெற்ற அஜித்திற்கு, 2025ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய அரசு பத்ம பூஷன் விருதைக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய்சங்கரிடம் பேசிய அமெரிக்கா.. என்ன மேட்டர்?
ஜெய்சங்கரிடம் பேசிய அமெரிக்கா.. என்ன மேட்டர்?...
மணல் விளையாட்டு: குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் அற்புதக் கலை!
மணல் விளையாட்டு: குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் அற்புதக் கலை!...
பாகிஸ்தான் என்ற நாடு வரைப்படத்தில் இருக்காது - அண்ணாமலை காட்டம்..
பாகிஸ்தான் என்ற நாடு வரைப்படத்தில் இருக்காது - அண்ணாமலை காட்டம்.....
பாகிஸ்தான் தாக்குதல்... ராணுவ அதிகாரிகள் பரபரப்பு விளக்கம்!
பாகிஸ்தான் தாக்குதல்... ராணுவ அதிகாரிகள் பரபரப்பு விளக்கம்!...
கோடை காலத்தில் சிறுநீரக கல் உருவாகும் அபாயம் அதிகரிக்குமா?
கோடை காலத்தில் சிறுநீரக கல் உருவாகும் அபாயம் அதிகரிக்குமா?...
ஆபரேஷன் சிந்தூர் பெயரில் உருவாகும் படம்.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
ஆபரேஷன் சிந்தூர் பெயரில் உருவாகும் படம்.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!...
சனிப்பிரதோஷத்தில் இப்படி வழிபட்டால் பலன்கள் ஏராளம்!
சனிப்பிரதோஷத்தில் இப்படி வழிபட்டால் பலன்கள் ஏராளம்!...
இந்தியாவுக்கு ஆதரவு... பாகிஸ்தானுக்கு அட்வைஸ் கொடுத்த அமெரிக்கா
இந்தியாவுக்கு ஆதரவு... பாகிஸ்தானுக்கு அட்வைஸ் கொடுத்த அமெரிக்கா...
டெல்லியை நோக்கி வந்த பாக். மிசைல்... வீழ்த்திய இந்தியப்படை..!
டெல்லியை நோக்கி வந்த பாக். மிசைல்... வீழ்த்திய இந்தியப்படை..!...
போர் பதற்றம்: தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இருக்குமா?
போர் பதற்றம்: தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இருக்குமா?...
ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய இந்தியா.. வீடியோ வெளியிட்ட ராணுவம்
ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய இந்தியா.. வீடியோ வெளியிட்ட ராணுவம்...