India-Pakistan Tensions: மீண்டும் தாக்குதல் நடத்தினால் போர்தான்.. பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை..!
India's Strong Response: பாகிஸ்தானின் தொடர்ச்சியான தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் திறம்பட முறியடித்துள்ளது. இந்தியாவில் எதிர்கால பயங்கரவாத தாக்குதல்கள் போராகக் கருதப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் மேற்கொண்ட ட்ரோன், ஏவுகணை தாக்குதல்கள் தடுக்கப்பட்டன. இந்தியாவின் பதிலடித் தாக்குதல்கள் பாகிஸ்தான் இராணுவத் தளங்களை இலக்காகக் கொண்டன. இந்த சம்பவங்கள் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை அதிகரித்துள்ளன.

டெல்லி, மே 10: இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் மேற்கொண்ட அனைத்து தாக்குதல்களையும் (India – Pakistan Tensions) இந்திய இராணுவம் (Indian Army) தோல்வியடைய செய்தது. இந்த தாக்குதல் முயற்சிக்கு பிறகு மத்திய அரசாங்கம் (Indian Government) மிகப்பெரிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி, இந்தியாவில் ஏதேனும் பயங்கரவாத தாக்குதல் நடந்தால், அது ஒரு போராக கருதப்படும் என்றும், எதிர்காலத்தில் எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையும் இந்தியாவிற்கு எதிரான போர் நடவடிக்கையாக கருதப்படும் என்று மத்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா எச்சரிக்கை:
Indian Govt has declared that any future act of terror will be considered an ACT OF WAR against India and will be responded accordingly.
The end game of terrorism in India is near than you can imagine.
Goosebumps#TerroristPakArmy #TerroristStateOfPakistan… pic.twitter.com/HuGKh2PsGe
— HEEBA KHAN (@HeebaKhan86) May 10, 2025
இந்தியாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த முயற்சித்தால் போராக கருதப்படும். அதேநேரத்தில், இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2025 ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் பயங்கரவாதக் குழுவான டிஆர்எஃப் பயங்கரவாதிகள் பொறுப்பு ஏற்று கொண்டனர். இந்த கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த 2025 மே 7ம் தேதி அதிகாலை இந்திய இராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த 9 முகாம்களை அழித்தது. இதற்கு இந்திய இராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என பெயர் வைத்தது.
பாகிஸ்தான் தக்க முயற்சி:
ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் கடந்த 2 நாட்களுக்கு மேலாக பாகிஸ்தான் ட்ரோன்கள், ஏவுகணை மற்றும் போர் விமானங்களை பயன்படுத்தி அச்சுறுத்தல் தர முயற்சித்தது. இதை எதையும் நடக்க விடாமல் இந்திய இராணுவம் திறம்பட முறியடித்தது. மேலும், பாகிஸ்தான் அத்துமீறினால் அதற்காகவும் இந்திய இராணுவம் முழு அளவில் தயாராக உள்ளது.
இந்திய இராணுவம் விளக்கம்:
இராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் சோபியா குரேஷி நேற்று அதாவது 2025 மே 9ம் தேதி விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோருடன் ஒரு சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்ட அனைத்து தாக்குதல் முயற்சிகளையும் இந்திய இராணுவம் முறியடித்தது மட்டுமின்றி, தக்க பதிலடியையும் கொடுத்தது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் அப்பாவி மக்களையும் பொதுமக்களின் உள்கட்டமைப்பையும் குறிவைக்கும் இழிவான விசயங்களை பாகிஸ்தான் தொடர்ந்து நடத்தி வருகிறது. ஸ்ரீநகர், அவந்திபுரா மற்றும் உதம்பூர் ஆகிய இடங்களில் உள்ள விமானப்படை தளங்களில் உள்ள ஒரு மருத்துவ மையம் மற்றும் பள்ளி வளாகத்தையும், பஞ்சாபில் உள்ள பல விமானப்படை தளங்களையும் அதிகாலை 1.40 மணிக்கு அதிவேக ஏவுகணைகள் மூலம் தாக்கியதில் சிறிது சேதம் ஏற்பட்டது. இதற்கு ரஃபிகி, முரித், ரஹீம் யார் கான், சக்லாலா, சுக்கூர் மற்றும் சுனியன் ஆகிய இடங்களில் உள்ள பாகிஸ்தான் இராணுவ நிலைகள் இந்திய போர் விமானங்களிலிருந்து துல்லியமாக ஏவுகணைகள் மூலம் தாக்கப்பட்டு தக்க பதிலடியும் கொடுக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.