பாகிஸ்தானின் வதந்தி பரப்பும் நடவடிக்கைகளை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது – இந்திய ராணுவம்!
Three Force Press Meet | இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் உறுதியாகியுள்ள நிலையில், இந்திய முப்படை தலைமை அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டனர். அதில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்தும், இழப்புகள் குறித்தும் அவர்கள் விளக்கமாக பேசியுள்ளனர்.

டெல்லி, மே 10 : இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan) இடையே போர் பதற்றம் நீடித்து வந்த நிலையில், இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்துள்ளன. இது குறித்து இந்திய முப்படையினர் செய்தியாளர் சந்திப்பை நடத்திய நிலையில் அதில் பேசிய கர்னல் சோஃபியா குரேஷி, பாகிஸ்தானின் வதந்தி பரப்பும் நடவடிக்கைகள் அனைத்தையும் இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்திய அரசு, போரை எவ்வாறு கையாண்டது என்பது குறித்தும் இந்த செய்தியாளர் சந்திப்பில் முப்படை அதிகாரிகள் சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். இந்த நிலையில், இந்த செய்தியாளர் சந்திப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.
முப்படைகளின் தலைமை அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பு
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், முப்படை அதிகாரிகள் கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டனர்.
கர்னல் சோஃபியா குரேஷி
#WATCH | Delhi: Colonel Sofiya Qureshi says, “Pakistan claimed that it damaged our S400 and Brahmos missile base with its JF 17, which is completely wrong. Secondly, it also ran a misinformation campaign that our airfields in Sirsa, Jammu, Pathankot, Bhatinda, Nalia and Bhuj were… pic.twitter.com/QOVrDBH899
— ANI (@ANI) May 10, 2025
கர்னல் சோஃபியா குரேஷி கூறியதாவது, பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் எஸ்400 மற்றும் பிரமோஸ் ஏவுகணைகளை சேதப்படுத்தியதாக கூறியது. ஆனால் அவை முற்றிலும் பொய்யானது. இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள மசூதிகளை தாக்கியதாக பாகிஸ்தான் கூறியது. ஆனால் அதுவும் முற்றிலும் பொய்யானது. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு, இந்திய ராணுவம் அதனை தெளிவுபடுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.
விங் கமாண்டர் வியோமிகா சிங்
#WATCH | Delhi | Wing Commander Vyomika Singh says, “Over the past few days, as we have seen, Pakistan has suffered very heavy and unsustainable losses after it has given us an unprovoked attack on our installations. It has suffered losses in both land and air. There has been an… pic.twitter.com/aUBkMygyyW
— ANI (@ANI) May 10, 2025
விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறியதாவது, இந்த சில நாட்களில் பாகிஸ்தான் கடும் பாதிப்புகளை எதிர்க்கொண்டுள்ளது. வானத்தில் மட்டுமன்றி, பூமியிலும் பாகிஸ்தான் கடும் இழப்புகளை சந்தித்துள்ளது என்று கூறியுள்ளார்.