போர் ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்.. காஷ்மீரில் அத்துமீறி தாக்குதல் நடத்த முயற்சி!
Pakistan Violates Ceasefire Agreement | இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீர், மே 10 : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் (Jammu and Kashmir Ceasefire) மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதனை மீறி பாகிஸ்தான் இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாக மாலை 5 மணி முதல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதாக இரண்டு நாடுகளும் அறிவித்திருந்த நிலையில், அதிர்ச்சியூட்டும் வகையில் பாகிஸ்தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. காஷ்மீர் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே அமலுக்கு வந்த போர் ஒப்பந்தம்
பஹல்காம் தாக்குதலுக்கு (Pahalgam Attack) பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அரசு ஆபரேஷன் சிந்தூரை (Operation Sindoor) கையில் எடுத்து பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வந்தது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டனர். இதற்கு பாகிஸ்தானும் பதில் தாக்குதல் நடத்திய நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வந்தது. இந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே இன்று ( மே 10, 2025) போர் ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.
போர் ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்
#WATCH | J&K: Red streaks seen and explosions heard as India’s air defence intercepts Pakistani drones amid blackout in Srinagar
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/XObqcbiQCe
— ANI (@ANI) May 10, 2025
இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே போர் ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், பாகிஸ்தான் ஜம்மு மற்றும் காஷ்மீர் மீது அத்துமீறி தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மாலை 5 மணி முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதாவது பாகிஸ்தானின் கதுவா, சம்பா, சுந்தர்பானி, அக்னூர், உதம்பூர், நவ்சேரா உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் நடந்து வருவதாகவும், பாகிஸ்தானின் தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் பயங்கர வெடி விபத்து சத்தம் கேட்டதாக பொதுமக்கள் கூறியுள்ள நிலையில், அது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.