Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Aadhaar : ஆதாரில் புகைப்படத்தை மாற்ற வேண்டுமா?.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!

How to Update Aadhaar Photo | ஆதார் கார்டில் பெயர், முகவரி, கை ரேகை, கண் ரேகை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். இதேபோல ஆதாரில் புகைப்படமும் இடம் பெற்றிருக்கும். இந்த புகைப்படத்தை பலரும் மாற்றாமல் வைத்திருப்பர். ஆனால், ஆதாரில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறுகிறது.

Aadhaar : ஆதாரில் புகைப்படத்தை மாற்ற வேண்டுமா?.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 10 May 2025 23:37 PM

இந்தியாவில் உள்ள பொதுமக்களுக்கு ஆதார் (Aadhaar) மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. ஆதார் இல்லையென்றால் பல வேலைகளை செய்து முடிக்க முடியாத சூழல் உள்ளது. குறிப்பாக ஒரு குழந்தை பள்ளியில் சேறுவது முதல், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது வரை என பல இடங்களில் ஆதார் முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. ஆதாரில் UIDAI (Unique Identification Authority of India) இந்திய தனித்துவ அடையாண ஆணையம் 12 இலக்க எண், பெயர், முகவரி, வயது, கை ரேகை, கண் ரேகை மற்றும் புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

ஆதார் விவரங்களை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றுவது கட்டாயம்

ஆதார் கார்டில் புகைப்படம் இடம் பெற்றிருக்கும் நிலையில், பெரும்பாலானவர்களுக்கு தங்களது குழந்தை பருவ புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கும். அதாவது அவர்கள் எந்த வயதில் ஆதார் கார்டை வாங்கினார்களோ அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இடம் பெற்றிருக்கும். ஆதார் கார்டில் உள்ள விவரங்களை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறுகிறது. இந்த நிலையில், ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை மாற்றுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆதாரில் புகைப்படத்தை மாற்றுவது எப்படி – சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ

  1. அதற்கு முதலில் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அதில் புகைப்படத்தை மாற்றுவதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  3. அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்ப வேண்டும்.
  4. அந்த விண்ணப்பத்தை தனித்துவ அடையாள ஆணையத்தின் இணையதளம் அல்லது அருகில் உள்ள இ சேவை மையத்தில் ஒப்படைக்க வேண்டும்.
  5. அந்த விவரங்களை பயோமெட்ரிக் சரிபார்த்தல் உதவியுடன் அதிகாரிகள் சோதனை செய்வர்.
  6. அதற்கு பிறகு புதிய புகைப்படத்தை மாற்றுவதற்கான அனுமதியை வழங்குவர்.
  7. இந்த செயல்முறைக்கு ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்.
  8. ஆதாரில் புகைப்படத்தை மாற்ற கோரி விண்ணப்பம் அளிக்கப்ப 10 முதல் 15 நாட்களுக்குள்ளாக புகைப்படம் அப்டேட் செய்யப்பட்டு புதிய ஆதார் கார்டு வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறைகளை பின்பற்றி ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை மிக சுலபமாக அப்டேட் செய்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரில் புகைப்படத்தை மாற்ற வேண்டுமா? - முழு விவரம் இதோ!
ஆதாரில் புகைப்படத்தை மாற்ற வேண்டுமா? - முழு விவரம் இதோ!...
சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியது - விக்ரம் மிஸ்ரி
சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியது - விக்ரம் மிஸ்ரி...
நான் கனவுல கூட நினைக்கல .. சூர்யா பற்றி மணிகண்டன் நெகிழ்ச்சி!
நான் கனவுல கூட நினைக்கல .. சூர்யா பற்றி மணிகண்டன் நெகிழ்ச்சி!...
சிலையென நினைத்து நிஜ முதலையிடம் சிக்கிய இளைஞன்!
சிலையென நினைத்து நிஜ முதலையிடம் சிக்கிய இளைஞன்!...
சம்பளத்தை வச்சிகோங்க.. தேசியப் பாதுகாப்பு நிதி வழங்கிய இளையராஜா!
சம்பளத்தை வச்சிகோங்க.. தேசியப் பாதுகாப்பு நிதி வழங்கிய இளையராஜா!...
'இந்தியன் 2' படம்.. மாறிய பிளான்.. எஸ்.ஜே சூர்யா வருத்தம்!
'இந்தியன் 2' படம்.. மாறிய பிளான்.. எஸ்.ஜே சூர்யா வருத்தம்!...
ஸ்ரீநகரில் வெடிசத்தங்கள்! ஜம்மு காஷ்மீர் முதல்வர் கண்டனம்..!
ஸ்ரீநகரில் வெடிசத்தங்கள்! ஜம்மு காஷ்மீர் முதல்வர் கண்டனம்..!...
இந்தியாவிற்கு ஆதரவு.. ஆமிர் கான், சைஃபை கொண்டாடும் இந்தியர்கள்..!
இந்தியாவிற்கு ஆதரவு.. ஆமிர் கான், சைஃபை கொண்டாடும் இந்தியர்கள்..!...
போர் ஒப்பந்தத்தை மீறி மீண்டும் தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான்!
போர் ஒப்பந்தத்தை மீறி மீண்டும் தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான்!...
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை வரவேற்கும் தலைவர்கள்!
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை வரவேற்கும் தலைவர்கள்!...
கோடையில் தயிர் ஏன் விரைவாக கெட்டுப்போகிறது? தடுப்பது எப்படி..?
கோடையில் தயிர் ஏன் விரைவாக கெட்டுப்போகிறது? தடுப்பது எப்படி..?...