India-Pakistan Tension: நாட்டிற்கு உதவ தன்னார்வலர்களாக அழைப்பு… வந்தே மாதரம் முழக்கத்துடன் குவிந்த இளைஞர்கள்..!
Chandigarh Youth Flood Civil Defence: இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தின் காரணமாக, சண்டிகர் இளைஞர்கள் பெருமளவில் சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்களாக சேர ஆர்வம் காட்டியுள்ளனர். சண்டிகர் துணை ஆணையரின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில், தாகூர் தியேட்டரில் நடைபெற்ற முகாமில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் பங்கேற்றனர். 'வந்தே மாதரம்', 'பாரத் மாதா கீ ஜெய்' போன்ற கோஷங்களுடன் அவர்கள் தங்கள் தேசபக்தியை வெளிப்படுத்தினர். துணை ஆணையர், தகுதியானவர்களுக்கு மூன்று மணி நேர பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்தார்.

சண்டிகர், மே 10: இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் (India Pakistan Tension) இடையில பதட்டத்திற்கு இடையில், நாடு முழுவதும் சமூக வலைதளங்கள் மூலம் ஸ்டேட்டஸ் வைத்து நாட்டு பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில், சமூக வலைதளங்கள் மட்டுமின்றி, தங்களால் தங்களது தாய் நாட்டிற்கும் ஏதாவது செய்ய முடியும் என்பதை சண்டிகர் (Chandigarh Youth) இளைஞர்கள் தற்போது நிரூபித்துள்ளனர். சண்டிகர் துணை ஆணையர், சண்டிகர் இளைஞர்களிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார். அதில், 18 வயதுக்கு மேற்பட்ட இளம் வயதினர் சிவில் பாதுகாப்பு (Civil Defence) தன்னார்வலர்களாக சேர்ந்து, இந்தியா அவசரகாலத்தில் இருக்கும்போது ஒத்துழைக்க வேண்டும். இதற்காக தானாக முன்வந்து பயிற்சி பெற்று, மிகவும் தேவைப்படும்போது இந்தியாவிற்காக சேவை செய்யுங்கள் என்று தெரிவித்திருந்தார்.
குவிந்த இளைஞர்கள்:
#WATCH | Huge lines seen in Chandigarh when local announcements were made for volunteers to aid in the assistance. pic.twitter.com/Q7YXWRg50J
— ANI (@ANI) May 10, 2025
சண்டிகர் துணை ஆணையர் முயற்சியின் கீழ், இன்று அதாவது 2025 மே 10ம் தேதி காலை 10.30 மணிக்கு செக்டார் 18ல் உள்ள தாகூர் தியேட்டரில் சிவில் பாதுகாப்பு சேர்க்கை மற்றும் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக, இளைஞர்கள் காலையில் தாகூர் தியேட்டரை அடைந்தனர். அங்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிகளவில் வந்தே மாதரம் மற்றும் பாரத் மாதா கீ ஜெய் போன்ற கோஷங்களை எழுப்பினார். அப்போது, தாகூர் தியேட்டரில் கூட்டம் அதிகமாக அதிகரித்ததால், அங்கு வந்த இளைஞர்களை செக்டார் 17க்கு செல்லுமாறு கேட்டு கொள்ளப்பட்டனர். தாகூர் தியேட்டரிலிருந்து செக்டார் 17 திரங்கா பூங்காவிற்கு செல்லும்போது, இளைஞர்கள் பாரத் மாதா கி ஜெய் என்ற கோஷங்களை எழுப்பி கொண்டிருந்தனர். இதில், இளைஞர்கள் மட்டுமல்ல, பெண்களும் பாரத் மாதா கீ ஜெய் என்ற கோஷங்களை எழுப்பியபடி பெருமளவில் திரண்டினர்.
துணை ஆணையர் செய்தியாளர்கள் சந்திப்பு:
— Chandigarh Admn (@chandigarh_admn) May 10, 2025
சண்டிகர் மாவட்ட துணை ஆணையர் நிஷாந்த் யாதவ் நேற்று அதாவது 2025 மே 10ம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது பேசிய அவர், “சிவில் பாதுகாப்பில் சேருவதன் மூலம் பங்களிக்க விரும்பும் பலரிடமிருந்து விண்ணப்பங்கள் மற்றும் விருப்புங்கள் பெற்றுள்ளோம். இதுபோன்ற கோரிக்கைகளை மனதில் கொண்டு, சண்டிகர் நகரின் தாகூர் தியேட்டரில் ஒரு முகாம் அமைக்கப்படுவதாக அறிவித்தோம். சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்களாக பணியாற்ற விரும்புவோர் வந்து தங்கள் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும். அதில், தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மூன்று மணி நேர பயிற்சி அளிக்கப்படும். இந்த செயல்முறைக்குப் பிறகு, வேலை மக்களிடையே பகிர்ந்தளிக்கப்படும்.” என்று தெரிவித்தார்.