நோ டிசிப்ளின்.. துஷாரிடம் இருந்து வீட்டு தல பதவியை பறித்த பிக்பாஸ் – வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil season 9: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் அது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டு தல பதவியை துஷாரிடம் இருந்து பறித்தது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.

நோ டிசிப்ளின்.. துஷாரிடம் இருந்து வீட்டு தல பதவியை பறித்த பிக்பாஸ் - வைரலாகும் வீடியோ

பிக்பாஸ்

Published: 

16 Oct 2025 10:56 AM

 IST

தொலைக்காட்சிகளில் ஒளிப்ரப்பாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் (Bigg Boss). இந்தியா முழுவதும் 5 மொழிகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியாவில் முதன் முறையாக இந்தி மொழியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி அதனைத் தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தற்போது 9-வது சீசனில் ஒளிபரப்பாகி மக்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. கடந்த 5-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். வெள்ளித்திரை பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள், சமூக வலைதளப் பிரபலங்கள் என பலதரப்பட்டோர் உள்ளே அனுப்பப்பட்டனர்.

இந்த நிகழ்ச்ச்யில் ஒவ்வொரு வாரமும் வீட்டை வழி நடத்துவதற்காக ஒரு கேப்டனை தேர்ந்தெடுக்க சில டாஸ்குகள் வைத்து தேர்ந்தெடுப்பது வழக்கம். கடந்த 8 சீசன்களாக பிக்பாஸ் வீட்டில் கேப்டன் என்று அழைக்கப்பட்ட அந்த பதவி இந்த 9-வது சீசனில் இருந்து வீட்டு தல என்று அழைக்கப்படுகின்றது. இந்த பதவியில் இருப்பவர்களுக்கு தனி அறை இந்த சீசனில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதல் வார வீட்டு தலையாக பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் துஷார் வெற்றிப் பெற்றார்.

வீட்டு தலைக்கே டிசிப்ளின் இல்லை – கடுப்பான பிக்பாஸ்:

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து 11வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடம் பிக்பாஸ் பேசுகிறார். அப்போது ஒவ்வொரு சீசனும் ஒரு விசயத்திற்கு ஃபேமஸாக இருந்துள்ளது. ஆனால் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி டிசிப்ளின் இல்லாததுக்குதான் ஃபேமஸா இருக்கு.

யாரும் சரியா மைக் மாட்றது இல்ல, பகலில் தூங்குவது என பல விசயங்கள் நடக்குது. ஏன் வீட்டு தலையே பல நேரத்தில் மைக் மாட்ட மறந்துவிடுகிறார். இப்படி டிப்ளின் இல்லாத ஒரு நபருக்கு வீட்டு தல பதவி எதுக்கு என்று துஷாரிடம் இருந்து வீட்டு தல பதவி தற்போது பறிக்கப்படுகிறது என்று பிக்பாஸ் அறிவித்தார். இது வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read… தல டாஸ்கால் பிக்பாஸ் வீட்டில் தொடரும் சண்டை… வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இயக்குநருடன் கருத்து வேறுபாடு… மகுடம் படத்தை தானே இயக்குகிறார் விஷால்!