Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மலையாளத்தில் மிஸ் பன்னாமல் பார்க்க வேண்டிய ஃபீல் குட் படங்கள்

Watch To Watch: தென்னிந்திய சினிமாவைப் பொருத்தவரை ஃபீல் குட் படங்கள் என்பது அதிகமாக வருவது மலையாள சினிமாவில்தான். ஓடிடியில் வருகைக்குப் பிறகு மலையாள சினிமாவின் பாதிப்பு மற்ற மொழி ரசிகர்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் மலையாளத்தில் வெளியான சிறந்த ஃபீல் குட் படங்களை பார்க்கலாம்.

மலையாளத்தில் மிஸ் பன்னாமல் பார்க்க வேண்டிய ஃபீல் குட் படங்கள்
படங்கள்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 14 May 2025 20:24 PM

சுலைகா மன்ஸில்: இயக்குநர் அஷ்ரஃப் ஹம்சா இயக்கத்தில் வெளியான படம் சுலைகா மன்ஸில் (Sulaikha Manzil). இந்தப் படத்தில் நடிகர்கள் லுக்மான் அவரன், அனார்கலி மரிக்கார் மற்றும் செம்பன் வினோத் ஜோஸ் ஆகியோர் முக்கியகதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இரண்டு இஸ்லாமிய குடும்பங்களில் திருமணத்தை சுற்றி நடக்கும் கதையை ரொமாண்டிக் காமெடி பாணியில் எடுத்திருந்தார் இயக்குநர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. 21-ம் தேதி ஏப்ரல் மாதம் 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தற்போது ஹாட் ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

ஹிருதயம்: இயக்குநர் வினீத் ஸ்ரீநிவாசன் எழுதி இயக்கியுள்ள படம் ஹிருதயம். இந்தப் படத்தில் நடிகர்கள் பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதார்ஷன், தர்ஷனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். 21-ம் தேதி ஜனவரி மாதம் 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் தற்போது ஹாட் ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

ப்ரோ டாடி: நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கி நடித்துள்ள படம் ப்ரோ டாடி. இந்தப் படத்தில் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் உடன் இணைந்து நடிகர்கள் மோகன்லா, கல்யாணி பிரியதர்ஷன், மீனா, லாலு அலெக்ஸ் , கனிஹா , ஜெகதீஷ் , மல்லிகா சுகுமாரன், சௌபின் ஷாஹிர் , உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

வரனே அவஷ்யமுண்டு: இயக்குநர் அனூப் சத்யன் எழுதி இயக்கியுள்ள படம் வரனே அவஷ்யமுண்டு. இந்தப் படத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் முன்னணி வேடத்தில் நடித்திருந்த நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சுரேஷ் கோபி, சோபனா, ஊர்வசி என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

இந்தப் படம் பிப்ரவரி மாதம் 7-ம் தேதி 2020-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படம் தற்போது சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

தண்ணீர் மதன் தினங்கள்: இயக்குநர் கிரிஷ் எழுதி இயக்கியுள்ள படம் தண்ணீர் மாத்தான் தினங்கள். இந்தப் படத்தில் நடிகர்கள் வினீத் ஸ்ரீநிவாசன், மேத்யூ தாமஸ், அனஸ்வரா ராஜன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் 29-ம் தேதி ஜூலை மாதம் 2019-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Chikoo Benefits :சப்போட்டோவால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?
Chikoo Benefits :சப்போட்டோவால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?...
பகலில் ஜங்க் ஃபுட், இரவில் நோ ஃபுட் - நமீதாவின் ஃபிட்னஸ் சீக்ரெட்
பகலில் ஜங்க் ஃபுட், இரவில் நோ ஃபுட் - நமீதாவின் ஃபிட்னஸ் சீக்ரெட்...
ஜங்க் ஃபுட் விளம்பரங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு
ஜங்க் ஃபுட் விளம்பரங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு...
ரஜினிகாந்த்துடன் அதிகம் நடிக்காதது ஏன்? மனம் திறந்த ஊர்வசி
ரஜினிகாந்த்துடன் அதிகம் நடிக்காதது ஏன்? மனம் திறந்த ஊர்வசி...
அட ஆச்சர்யம்.. காரை ஸ்கிட் செய்து இளைஞருக்கு டப் கொடுத்த தாத்தா
அட ஆச்சர்யம்.. காரை ஸ்கிட் செய்து இளைஞருக்கு டப் கொடுத்த தாத்தா...
ஐபிஎல் தொடங்கும் முதல்நாளே கொட்டப்போகும் மழை.. போட்டி ரத்தா..?
ஐபிஎல் தொடங்கும் முதல்நாளே கொட்டப்போகும் மழை.. போட்டி ரத்தா..?...
மதுரையில் தொடங்குகிறதா சூர்யாவின் "வாடிவாசல்" ஷூட்டிங்?
மதுரையில் தொடங்குகிறதா சூர்யாவின்
பிரபஞ்சம் விரைவில் அழியப்போகுதா? ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?
பிரபஞ்சம் விரைவில் அழியப்போகுதா? ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?...
கோடையில் சுரைக்காய் ஜூஸ் குடித்தால் இவ்வளவு அற்புத நன்மைகளா?
கோடையில் சுரைக்காய் ஜூஸ் குடித்தால் இவ்வளவு அற்புத நன்மைகளா?...
மலையாளத்தில் மிஸ் பன்னாமல் பார்க்க வேண்டிய ஃபீல் குட் படங்கள்
மலையாளத்தில் மிஸ் பன்னாமல் பார்க்க வேண்டிய ஃபீல் குட் படங்கள்...
தக் லைஃப் டிரெய்லர் - இசை வெளியீட்டு விழா அறிவிப்பு வெளியானது!
தக் லைஃப் டிரெய்லர் - இசை வெளியீட்டு விழா அறிவிப்பு வெளியானது!...