Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Toxic : யாஷின் ‘டாக்சிக்’ படம் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமாகிறாரா அனிருத்?

Toxic Movie Music Director Update : தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் அனிருத் ரவிச்சந்தர். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துவரும் நிலையில், கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகும் டாக்சிக் படத்தின் மூலம் கன்னட சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகிவருகிறது.

Toxic : யாஷின் ‘டாக்சிக்’ படம் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமாகிறாரா அனிருத்?
அனிருத் மற்றும் யாஷ்Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 07 Jul 2025 14:22 PM

கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் யாஷ் (Yash). இவர் சின்னதிரை நடிகராக இருந்து, அதைத் தொடர்ந்து சினிமாவில் அடியெடுத்து வைத்தவர். இவருக்கு பான் இந்தியா அளவிற்கு இவருக்குப் பிரபலத்தைக் கொடுத்த படமாக அமைந்தது கே.ஜி.எப் (KGF). கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் மூலம் பான் இந்திய அளவிற்குப் பிரபலமானார். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் பான் இந்திய மொழிகளில் உருவாகும் படமாக இருப்பது டாக்சிக். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் கீத்து மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்கிவருகிறார். இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் அதிரடி ஆக்ஷ்ன் திரைப்படமாக உருவாகிவருகிறது. இந்த படத்தில் யாஷ், நயன்தாரா (Nayanthara) , கியாரா அத்வானி (Kiara Advani) என பான் இந்திய பிரபலங்கள் பலரும் இணைந்து நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஹாலிவுட் பட இசையமைப்பாளர், ஜெர்மி ஸ்டாக் (Jeremy Stock) இசையமைப்பதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் பின்னணி இசையைத் தமிழ் பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை. இந்த படத்தில் அனிருத் (Anirudh) பின்னணி இசையமைக்கவுள்ளதாகக் கூறப்படும் நிலையில் , இப்படம்தான் இவருக்குக் கன்னட மொழி அறிமுக படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

டாக்சிக் படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

டாக்சிக் படத்தின் ரிலீஸ் எப்போது :

கன்னட நடிகர் யாஷ் முன்னணி நடிகராக நடித்துவரும் படம்தான் இந்த டாக்சிக். இப்படத்தின் அறிவிப்புகளானது கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படமானது ஹாலிவுட் திரைப்பட ரேஞ்சில் உருவாகிவருகிறது. இப்படத்தில் யாஷுடன் நடிகர்கள் நயன்தாரா மற்றும் இந்தி நடிகை கியாரா அத்வானி மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் சுமார் 1960 ஆண்டுகளுக்கு முந்தய காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகிவருகிறதாம்.

இந்த படத்தில் ஹாலிவுட் பட கலைஞர்கள் பலரும் இணைந்துள்ளனர். இந்த படமானது தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் உருவாக்கவுள்ளது. மேலும் இந்த திரைப்படமானதுவரும் 2026ம் ஆண்டு மார்ச் 19ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

டாக்சிக் பட பட்ஜெட் :

இந்த டாக்சிக் படத்தைப் பிரபல கன்னட திரைப்பட தயாரிப்பு நிறுவனமா கே.வி.என். ப்ரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம்தான் தமிழில் தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தை தயாரித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் ஜன நாயகன் படமானது சுமார் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதைப்போல் இந்த டாக்சிக் திரைப்படம் சுமார் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவாகிவருகிறதாம். இப்படம் பான் இந்தியா அளவிற்கு வெளியாகவுள்ள நிலையில், நல்ல வரவேற்பை பெரும் என கூறப்படுகிறது.