Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Trisha Krishnan: குட் பேட் அக்லி படம்.. த்ரிஷா பெற்ற சம்பளம் இத்தனை கோடியா?

Trisha Krishnan Salary In Good Bad Ugly Movie : தென்னிந்திய சினிமாவில் நயன்தாராவைத் தொடர்ந்து முன்னணி நடிகையாக இருந்து வருபவர் த்ரிஷா கிருஷ்ணன். இவர் கடந்த 2 வருடங்களாகா தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். தற்போது இவரின் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தில் பெற்ற சம்பளம் குறித்துப் பார்க்கலாம்.

Trisha Krishnan: குட் பேட் அக்லி படம்.. த்ரிஷா பெற்ற சம்பளம் இத்தனை கோடியா?
அஜித் குமார் மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் Image Source: X
barath-murugan
Barath Murugan | Updated On: 13 Jun 2025 09:35 AM

நடிகை த்ரிஷா கிருஷ்ணனின் (Trisha Krishnan)  நடிப்பில் மட்டும் இந்த ஆண்டில் மட்டும் பல திரைப்படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. நயன்தாராவைத் தொடர்ந்து, தற்போது நடிகை த்ரிஷாவின் பக்கம் தொடர்ந்து திரைப்படங்கள் குவிந்து வருகிறது. இவரின் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, சூர்யா 45, தக் லைப், விஸ்வம்பரா மற்றும் ராம் எனப் பல படங்கள் வெளியாகவுள்ளது. இதில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி விட்டது. மேலும் குட் பேட் அக்லி  (Good Bad Ugly) படமானது ரிலீசாகியுள்ளது.   நடிகர் அஜித் குமாரின் (Ajith Kumar) முன்னணி நடிப்பில், இவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. அஜித்தின் 63வது திரைப்படமான இதனை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படமானது இன்று (2025, ஏப்ரல் 10) வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் நடிகர் அஜித்தைப் போல நடிகை த்ரிஷாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த குட் பேட் அக்லி படத்தில் நடிப்பதற்கு நடிகை த்ரிஷா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம் குறித்தான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகை த்ரிஷா கிருஷ்ணன் சுமார் ரூ. 4கோடியைச் சம்பளமாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

குட் பேட் அக்லி :

விடாமுயற்சி திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித்துடன், த்ரிஷா நடித்துவந்த படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த படமானது சுமார் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆக்ஷ்ன், அதிரடி காமெடி மற்றும் காதல் கதைக்களத்துடன் இந்த படமானது உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிகை த்ரிஷா கிருஷ்ணனும் ஆக்ஷ்ன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்திலும் த்ரிஷா, அஜித்தின் நடனம் நிறைந்த சர்ப்ரைஸ் பாடல் இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த படத்தை தொடர்ந்து நடிகை த்ரிஷா இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியின் முன்னணி இயக்கத்தில் சூர்யா45 திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தில் சுமார் 19 வருடங்களுக்குப் பின் சூர்யாவுடன் இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் புதிய படங்களில் நடிப்பதற்குக் கதைகளையும் கேட்டுவருகிறார் என்றும் கூறப்படுகிறது. நடிகை த்ரிஷா விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் ஜோடியாக நடித்து வரவேற்பைப் பெற்றிருந்தார், அதே போல் இந்த படத்திலும் நல்ல வரவேற்பைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த குட் பேட் அக்லி படமானது ரசிகர்களை முழு அளவில் திருப்திபடுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.