மணி சார் என்ன செல்லமா அப்படிதான் கூப்டுவார் – நடிகை மதுபாலா
Actress Madhubala: 90ஸ் கிட்ஸ்களிடையே மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை மதுபாலா. இவரது நடிப்பில் வெளியான ஒட்டகத்த கட்டுக்கோ பாடல் இன்றும் ரசிகர்களால் கொண்டாப்படும் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் நடிகை மதுபாலா சமீபத்தில் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, இந்தி என 90களில் பான் இந்திய நடிகையாக வலம் வந்தவர் நடிகை மதுபாலா (Actress Madhubala). 1991-ம் ஆண்டு இயக்க்குநர் பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அழகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக நடித்தார் நடிகை மதுபாலா. இந்தப் படத்தில் நாயகனாக நடிகர் மம்முட்டி நடித்திருந்தார். இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார் நடிகை மதுபாலா. இதனை தொடர்ந்து இவர் தமிழில் 1992-ம் ஆண்டு இயக்குநர் கே பாலசந்தர் இயக்கத்திலேயே மீண்டும் வானமே எல்லை படத்தில் நடித்தார். இந்த படங்களை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தில் நடித்தார். இதில் நடிகர் அரவிந்தசாமி நாயகனாக நடித்திருந்தார்.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். படத்தில் நடிகை மதுபாலாவிற்கு சின்ன சின்ன ஆசை என்ற அறிமுகப் பாடலை இயக்குநர் வைத்திருப்பார். அது நமது நாட்டில் வாழும் பல பெண்களின் ஆசைகளை ஒன்றினைத்ததாக இருக்கும் என்றே சொல்லலாம்.
அந்தப் பாட்டை தொடர்ந்து நடிகர் அரவிந்த் சாமி உடன் இணைந்து நடிகை மதுமிதா நடித்த காதல் ரோஜாவே ரொமாண்டிக் பாடலும் ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து நடிகை மதுபாலா ஜென்டில்மேன், மிஸ்டர் ரோமியோ, பாஞ்சாலங்குரிச்சி, இருவர் என தொடர்ந்து படங்களில் நடித்தார்.
தமிழில் குறைவான படங்களில் நடித்து இருந்தாலும் நடிகை மது பாலாவிற்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம் என்றே சொல்லலாம். குறிப்பாக இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில்மேன் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் வரும் ஒட்டகத்தை கட்டிகோ பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
நடிகை மதுபாலாவின் இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
தொடர்ந்து தமிழில் நாயகியாக நடித்த நடிகை மதுபாலா தற்போது பான் இந்திய மொழிகளில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இறுதியாக இவரது நடிப்பில் தமிழில் வெளியான படம் தேஜாவு. 2022-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் நடிகை மதுபாலா காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது.
இந்த நிலையில் நடிகை மதுபாலா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். சினி உலகு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த நடிகை மதுபாலா இயக்குநர் மணிரத்னம் குறித்து பேசினார். அப்போது மணிரத்னம் தன்னை செல்லமாக பாரட் (Parrot) என்று செல்லமாக அழைப்பார் என்று தெரிவித்துள்ளார்.