இந்தி சினிமாவில் மீண்டும் நடிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்…!

Actress Keerthy Suresh: தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் இறுதியாக தமிழில் நடித்தப் படம் ரகு தாத்தா. இதனை தொடர்ந்து இந்தியில் இவர் பேபி ஜான் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது பாலிவுட் சினிமாவில் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தி சினிமாவில் மீண்டும் நடிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்...!

நடிகை கீர்த்தி சுரேஷ்

Published: 

15 May 2025 12:05 PM

நடிகை கீர்த்தி சுரேஷ் (Actress Keerthy Suresh) 2000 ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான கீதாஞ்சலி என்ற படத்தின் மூலம் நாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் அறிமுகம் ஆனார். இந்தப் படத்தை இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கி இருந்த நிலையில் நடிகர் மோகன்லால் முன்னணி வேடத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து 2015-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார் நடிகை கீர்த்தி சுரேஷ். இயக்குநர் ஏ.எல்.விஜய் இயகத்தில் நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடித்த இது என்ன மாயம் படத்தில் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகர்களான தனுஷ், விஜய், விக்ரம், சூர்யா, ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

மலையாள சினிமா மூலம் நடிகையாக அறிமுகம் ஆனாலும் இவர் அதிகமாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிவாவில்தான் படங்களை நடித்துள்ளார். தென்னிந்திய மொழிகளில் நாயகியாக வலம் வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டிலும் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார். அதன்படி இவர் கடந்த ஆண்டு வெளியான பேபி ஜான் என்ற படத்தின் மூலம் இந்தி சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார்.

இந்தப் படம் தமிழில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த தெறி படத்தின் இந்தி ரீமேக் ஆகும். இந்தப் படத்தை இந்தியில் இயக்குநர் அட்லி தயாரித்திருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது குறிப்பிடத்தகது.

நடிகை கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டா பதிவு:

தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் அக்கா என்ற வெப் தொடரில் நடித்து வருகிறா. இது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது. இதன் படப்பிடிப்பில் தீவிரமாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் மீண்டும் பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதன்படி நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இரண்டாவது பாலிவுட் படத்திற்காக இயக்குநர் ஆதித்யா நிம்பல்கர் உடன் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இவர் முன்னதகா செக்டார் 36 என்ற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் ராஜ்குமார் ராவ் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories
காமெடி படத்தில் இத்தனை ட்விஸ்டா? அமேசான் ப்ரைம் வீடியோவில் இருக்கும் இந்த மதுர மனோகர மோஹம் படத்தை கண்டிப்பா பாருங்க!
ஜோதிகா மற்றும் கார்த்தி இல்லாமல் சூர்யா இன்ஸ்டாவில் ஃபாலோ பண்ணும் அந்த ஒரே ஒரு தமிழ் நடிகர்… யார் தெரியுமா?
பிளாக் மெயில் முதல் சரண்டர் வரை… இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
இனி ஃபேமிலி செண்டிமெண்ட்லாம் ஹிட்டடிக்கதுனு நீ சினிமாவை விட்டு போ சொன்னாங்க – இயக்குநர் பாண்டிராஜ் பேச்சு!
பண மோசடி வழக்கில் பிரபல காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
தூக்கமில்லாமல் கஷ்டப்பட்டேன்…. ‘கிங்டம்’ பட நிகழ்வில் விஜய் தேவரகொண்டா உருக்கம்!