இனி நீயா நானாணு பாக்கலாம்… கமல் ஹாசன் – சிலம்பரசனின் ‘தக் லைஃப்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

Thug Life Movie Trailer : தமிழ் சினிமாவின் இரு பெரும் தூண்களின் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தக் லைஃப். இந்த அதிரடி ஆக்ஷ்ன் படமானது கமல் ஹாசன், மணிரத்னம் மற்றும் சிலம்பரசனின் கூட்டணியில் உருவாகியுள்ளது. இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில் படக்குழு, தக் லைஃப் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது.

இனி நீயா நானாணு பாக்கலாம்... கமல் ஹாசன்  - சிலம்பரசனின் தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

தக் லைஃப் திரைப்பட டிரெய்லர்

Published: 

17 May 2025 17:13 PM

கோலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் மணிரத்னம் (Mani Ratnam). இவரின் இயக்கத்தில் இறுதியாக மிகப் பிரம்மாண்டமாக வெளியான படம் பொன்னியின் செல்வன் 2 (Ponniyin Selvan 2). இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவரின் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தக் லைஃப் (Thug Life). இந்த படத்தின் கதையை மணிரத்னம் மற்றும் கமல் ஹாசன் (Kamal Haasan) இணைந்து எழுதியுள்ளனர். கமலின் 234வது திரைப்படம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் நடிகர் கமல் ஹாசன் முன்னணி நாயகனாக நடிக்க அவருக்கு இணையான, அதிரடி ஆக்ஷ்ன் நாயகனாக நடிகர் சிலம்பரசன் (Silambarasan) நடித்துள்ளார். இவர்கள் இருவரின் கூட்டணியில் இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படத்திற்காக நடிகர் சிலம்பரசன் கடந்த 2024ம் ஆண்டில் மற்ற எந்த படங்களிலும் கமிட்டாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிகர் கமலுக்கு ஜோடியாக நடிகை அபிராமியும், நடிகர் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணனும் இணைந்து நடித்துள்ளனர். இந்த இரு ஜோடிகளும் பல வருடங்களுக்கு இந்த படத்தின் மூலமாக இணைந்து நடித்துள்ளனர்.

இந்த தக் லைஃப் படமானது வரும் 2025, ஜூன் 5ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அதைத் தொடர்ந்து தற்போது இந்த படக்குழு படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லரானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தக் லைஃப் படக்குழு வெளியிட்ட ட்ரெய்லர் பதிவு :

 

நடிகர் கமல் ஹாசனின் முன்னணி நடிப்பில் ஆக்ஷ்ன் , குடும்பம் மற்றும் மாறுபட்ட கதைக்களத்தில் இந்த தக் லைஃப் படமானது உருவாகியுள்ளது. இதில் நடிகர் கமல் ஹாசனுடன் நடிகர்கள் சிலம்பரசன், திரிஷா, அபிராமி, சஞ்சனா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, சன்யா மல்ஹோத்ரா, நாசர், ஜோஜூ ஜார்ஜ், மற்றும் வடிவுக்கரசி என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் மற்றும் திரிஷா கிருஷ்ணனின் கதாபாத்திரங்கள் மிகவும் முக்கியமானதாகத் தெரிகிறது. கடந்த 2023ம் ஆண்டிலே இந்த படம் அறிவிக்கப்பட்டிருந்தது நிலையில் சுமார் 1 ஆண்டுகளுக்கும் மேலாகத் தயாராகி தற்போது ரிலீஸிர்க்கு காத்திருக்கிறது. இந்த படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில வாரங்கள் மட்டும் உள்ள நிலையில், படக்குழு ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது.

தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியானது, சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. தற்போது வேலய்யான் இந்த படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.