Vijay Antony : விஜய் ஆண்டனி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மார்கன் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?
Ga Ga Na Maargan Movie Release Update : தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளரும் மற்றும் நடிகருமாக இருந்து வருபவர் விஜய் ஆண்டனி. இவரின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம்தான் ககன மார்கன். இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில் படக்குழு ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளது.

நடிகர் விஜய் ஆண்டனியின் (Vijay Antony ) நடிப்பில் இறுதியாக வெளியான படம் ஹிட்லர் (Hitler) . இந்த படத்தை இயக்குநர் தனா (Dhana) இயக்கியிருந்தார். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியாகியிருந்தது. இந்த படமானது முற்றிலும் ஆக்ஷ்ன் மர்மம் கலந்த கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. மேலும் இந்த படத்திற்கு போதுமான வரவேற்புகள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடிகர் விஜய் ஆண்டனி கமிட்டானார். இந்நிலையில் தற்போது இவரின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம் மார்கன் ( Maargan) . இந்த படத்தை இயக்குநர் லியோ ஜான் பால் (Leo John Paul) இயக்கியுள்ளார். சினிமா திரைப்பட எடிட்டராக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர், இந்த ககன மார்கன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.
இந்த படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி முன்னணி ஹீரோவாக நடித்துள்ளார். இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தை, பாத்திமா விஜய் ஆண்டனி பிலிம்ஸ் பேனரின் கீழ் நடிகர் விஜய் ஆண்டனியே தயாரித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு தொடங்கி அதே ஆண்டின் இறுதியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷ்ன் நடந்து வந்தது . இந்நிலையில் இந்த படமானது முழுமையாகத் தயாரான நிலையில், படக்குழு ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளது. இந்த படமானது வரும் 2025, ஜூன் 27ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது இந்த தகவலானது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.
நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்ட எக்ஸ் பதிவு :
#MAARGAN – Releasing in theatres June 27 ❌@leojohnpaultw @AJDhishan990 @vijayantonyfilm @mrsvijayantony pic.twitter.com/FJ1EwZpY2m
— vijayantony (@vijayantony) May 14, 2025
இந்த மார்கன் படத்திற்கு நடிகர் விஜய் ஆண்டனிதான் இசையமைத்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் அவருடன் நடிகர்கள் சமுத்திரக்கனி, பிரிகிதா சகா, தீபிஷிகா மற்றும் பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி தனது சகோதரியின் மகன் அஜய் திஷான் என்பவரை முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
நடிகர் விஜய் ஆண்டனியின் இந்த படமானது ஒரு கொலை மற்றும் அதனை சுற்றி நடக்கும் கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படம் நிச்சயம் விஜய் ஆண்டனிக்கு வெற்றிப் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளது. இந்த தகவல்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.