நந்தா படத்தில கத்துகிட்டது ரோலக்ஸ் வரைக்கும் யூஸ் ஆச்சு – நடிகர் சூர்யாவின் சுவாரஸ்ய பேச்சு
Actor Suriya: நடிகர் சூர்யா ரசிகர்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிடவேண்டும் என்றும் அது உடல் நலத்திற்கு நல்லது அல்ல என்று தெரிவித்துள்ள நிலையில் முன்னதாக நந்தா படத்தில் அவர் எப்படி சிகரெட் பிடித்தார் என்பது குறித்து பேசியது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

நடிகர் சூர்யா முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது நந்தா படத்தில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் 2001-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் நந்தா. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் லைலா, கருணாஸ், ராஜ்கிரண், சரவணன், ராஜஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மிகவும் வித்யாசமான கதாப்பாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்தது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
நந்தா படத்தில் சிகரெட் பிடிக்க கற்றுக் கொண்டேன்:
நடிகர் சூர்யா முன்னதாக பட விழாவில் கலந்துகொண்டபோது நந்தா படத்தில் சிகரெட் பிடிக்க தெரியாமல் ஷூட்டிங்கில் திணறியது குறித்து பேசியுள்ளார். நடிகர் சூர்யா பேசியதாவது, நந்தா படத்தில் நடிக்க கமிட்டான போது முதல் நாள் ஷூட்டிங்கில் நான் சிகரெட் பிடிப்பது போல காட்சி எடுக்க வேண்டும்.
ஷூட்டிங்கிற்கு எல்லாம் தயாராகிவிட்டது. ஆனால் எனக்கு சிகரெட் பிடிக்கத் தெரியாது என்று சொல்ல ரொம்ப கூச்சமாக இருந்தது. ஷூட்டிங் தொடங்கிச்சு நான் சிகரெட்டை பற்றவைக்க தெரியாமல் தவிப்பதைப் பார்த்த இயக்குநர் பாலா உட்பட படக்குழுவினர் அந்த காட்சியை விட்டுவிட்டு அடுத்தக் காட்சியை எடுக்க தயாராகினர்.
நடிகர் சூர்யா இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
ஆனால் நான் அதை திரும்ப திரும்ப செய்து பார்த்தேன். ஒரு தீப்பெட்டியில் 100 குச்சிகள் இருக்கும் என்றால் சுமார் 300 குச்சிகளை பற்றவைத்தேன். பிறகு சிகரெட் எப்படி பற்ற வைப்பது என்பதை கற்றுக்கொண்டேன். அப்படி நந்தா படத்தில் கற்றுக் கொண்டது தான் தற்போது ரோலக்ஸ் வரை பயன்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் நடிப்பில் வரவுள்ள படங்களின் அப்டேட்:
நடிகர் சூர்யா நடிப்பில் இறுதியாக ரெட்ரோ படம் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சூர்யா தற்போது தனது 45-வது படத்திற்காக நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குநர் வெங்கி அட்லூரி உடன் தனது 46-வது படத்திற்கு கூட்டணி வைத்துள்ளார் என்ற அப்டேட்டும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. முன்னதாக இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான லக்கி பாஸ்கர் படம் பான் இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.