Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வேண்டா வெறுப்பாக குஷி படத்தில் நடித்த ஷாம்: தேடி வந்த ஹீரோ வாய்ப்பு – சுவாரசியத் தகவல்

Actor Shaam about Thalapathy Vijay's Kushi : நடிகர் ஷாம் 12பி, உள்ளம் கேட்குமே போன்ற படங்களின் மூலம் ஹீரோவாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். இந்த நிலையில் குஷி படத்தில் நடித்ததன் மூலம் தான் தனக்கு 12பி படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக அவர் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

வேண்டா வெறுப்பாக குஷி படத்தில் நடித்த ஷாம்: தேடி வந்த ஹீரோ வாய்ப்பு – சுவாரசியத் தகவல்
ஷாம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 01 Jun 2025 08:15 AM

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஜீவாவின் (Jeeva) இயக்கத்தில் 12பி (12B) படத்தின் ஹீரோவாக அறிமுகமானவர் ஷாம் (Shaam). முதல் படத்திலேயே ஒரு பக்கம் சிமரன், மற்றொரு பக்கம் ஜோதிகா என அப்போதைய டாப் ஹீரோயின்ஸ் இவருக்கு ஜோடியாக நடித்தனர்.   விவேக்கின் காமெடி, ஹாரிஸ் ஜெயராஜின் இசை  என படத்தை இளைஞர்களிடையே கொண்டு சேர்த்தது. குறிப்பாக ஜீவாவின் தனது ஒளிப்பதிவின் படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்திருந்தார். இந்தப் படத்தில் ஷாம் ஹீரோவாக நடிப்பதற்கு காரணம் குஷி படம் தான். குஷி படத்தில் விஜய்யின் நண்பராக ஒரு சில காட்சிகளில் தோன்றியிருப்பார் ஷாம். இந்தப் படம் தான் அவருக்கு 12பி பட வாய்ப்பை பெற்றுத் ததந்தது. இது குறித்து பிஹைண்ட்வுட்ஸ்க்கு அளித்த நேர்காணலில் ஷாம் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

குஷி படத்தில் வேண்டா வெறுப்பாக நடித்த ஷாம்

எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் விஜய், ஜோதிகா இணைந்து நடித்த குஷி படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருப்பார் ஷாம். தற்போது பிரபல நடிகராக இருக்கும் ரவி மரியா குஷி படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியிருந்தார். விஜய் நண்பர்கள் வேடத்தில் நடிப்பதற்கு ஆட்களை தேடிக்கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது நடிப்பதற்காக வாய்ப்பு தேடி வந்த ஷாமை குஷி படத்தில் முக்கியமான வேடம் என ரவி மரியா படப்பிடிப்பிற்கு அழைத்து சென்றிருக்கிறார்.

ஷாமின் இன்ஸ்டாகிராம் பதிவு

 

 

View this post on Instagram

 

A post shared by Shaam (@actor_shaam)

ஆனால் படப்பிடிப்பு தளத்துக்கு போனதும் தான் ஷாமிற்கு தெரிந்திருக்கிறது. நடிப்பதற்கு முக்கியத்துவம் இல்லாத நண்பர் வேடம் என்று. இதனையடுத்து ஒரு காட்சியில் மட்டும் நடித்துவிட்டு கோபமாக கிளம்பியிருக்கிறார். அப்போது குஷி படத்தின் ஒளிப்பதிவாளரான ஜீவா ஷாமை கவனித்து தான் அடுத்த இயக்கப்போகும் படம் பற்றி தெரிவிக்கஅப்படித்தான் அவருக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் வேண்டா வெறுப்பாக நடித்த குஷி படம் தான் அவரை ஹீரோவாக மாற்றியிருக்கிறது. வாய்ப்பு யாருக்கு எப்பொழுது வரும் என்று சொல்ல முடியாது. அப்படித்தான் ஷாமிற்கு வந்த குஷி வாய்ப்பு அவருக்கு தமிழ் சினிமாவில் கதாநாயகனாக மாற்றியிருக்கிறது.

12பி படத்தில் இண்டர்வியூ செல்ல பேருந்துக்காக காத்திருக்கும் இளைஞர், பேருந்தை பிடித்து சரியான நேரத்துக்கு இண்டர்வியூ சென்றால் ஒரு கதையும் பேருந்தை தவறவிட்டால் ஒரு கதையும் என இரண்டு விதமாக கதை சொல்லி முதல் படத்திலேயே ஆச்சரியப்படுத்தினார் ஜீவா. 12 பி, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே, தாம் தூம் என அவர் இயக்கிய படங்களுக்காகவும் ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களுக்காகவும் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இயக்குநராகும் ஜீவாவின் மகள் சனா

 

 

View this post on Instagram

 

A post shared by Sanaa Mariam (@sanaa_mariam)

இந்த நிலையில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்த தாம் தூம் படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்ற அவர் அங்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இயக்குநர் ஜீவா விட்டு சென்ற இடம் நிரப்பப்படாமல் அப்படியே இருக்கிறது. இந்த நிலையில் அவரது மகள் சனா மரியம் தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 படங்களில் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். தனது முதல் படத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் இளம் ஆதித்த கரிகாலனாக நடித்த சந்தோஷ் மற்றும் தெய்வத்திருமகள் சாரா ஆகியோரை வைத்து ஒரு ரொமாண்டிக் திரில்லர் படத்தை இயக்கி வருகிறார்.

நடிகர் நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா...
நடிகர் நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா......
ஸ்டேட்டஸை ஸ்பெஷலா மாத்த வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்
ஸ்டேட்டஸை ஸ்பெஷலா மாத்த வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்...
மழை அச்சுறுத்தல்..! RCB - PBKS ஐபிஎல் பைனல் ரத்தாக வாய்ப்பா?
மழை அச்சுறுத்தல்..! RCB - PBKS ஐபிஎல் பைனல் ரத்தாக வாய்ப்பா?...
தியேட்டரில் ஹிட் அடித்த டூரிஸ்ட் ஃபேமிலி ஓடிடியில் வெளியானது!
தியேட்டரில் ஹிட் அடித்த டூரிஸ்ட் ஃபேமிலி ஓடிடியில் வெளியானது!...
ஆட்டோ டிரைவரை அடித்த வீடியோ வைரல் - மன்னிப்புக்கேட்ட பெண்
ஆட்டோ டிரைவரை அடித்த வீடியோ வைரல் - மன்னிப்புக்கேட்ட பெண்...
இந்தியாவின் தேசிய மொழி இதுதான்.. திமுக MP கனிமொழி சுவாரஸ்ய பதில்!
இந்தியாவின் தேசிய மொழி இதுதான்.. திமுக MP கனிமொழி சுவாரஸ்ய பதில்!...
கோயில்களில் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் திட்டம் தொடக்கம்
கோயில்களில் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் திட்டம் தொடக்கம்...
அதிரடி ஆக்ஷ்னில் நடிகர் சசிகுமாரின் - 'ஃப்ரீடம்' படத்தின் டீசர்!
அதிரடி ஆக்ஷ்னில் நடிகர் சசிகுமாரின் - 'ஃப்ரீடம்' படத்தின் டீசர்!...
ரஜினிகாந்தின் பழையப் பட காட்சிகள் கூலி படத்தில் உள்ளதா?
ரஜினிகாந்தின் பழையப் பட காட்சிகள் கூலி படத்தில் உள்ளதா?...
விக்ரம் பிரபு - அனுஷ்காவின் 'காதி' படத்தின் ரிலீஸ் அறிவிப்பு!
விக்ரம் பிரபு - அனுஷ்காவின் 'காதி' படத்தின் ரிலீஸ் அறிவிப்பு!...
போன் பேட்டரியை காலி செய்யும் இன்ஸ்டாகிராம் - கூகுள் விளக்கம்
போன் பேட்டரியை காலி செய்யும் இன்ஸ்டாகிராம் - கூகுள் விளக்கம்...