நாட்டின் உன்னதமான கலாச்சாரம் இளைஞர்களிடம் சேர்க்கப்பட வேண்டும் – ரஜினிகாந்த்
Actor Rajinikanth: இன்று 30-ம் தேதி ஏப்ரல் மாதம் 2025-ம் ஆண்டு சென்னையில் நடைப்பெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் வீடியோ மூலம் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாட்டில் உள்ள இன்றைய இளைஞர்களிடம் உன்னதமான கலாச்சாரத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களுக்கு போட்டியாக தொடர்ந்து 50 வருடங்களுக்கு மேலாக தங்களது இடங்களை விட்டுக் கொடுக்காமல் நடித்து வருகிறார்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) மற்றும் கமல்ஹாசன் (Kamal Haasan) இருவரும். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் வேட்டையன். இந்தப் படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்கியிருந்தார். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் குற்றம் செய்யாத நபரை தவறாக நினைத்து என்கவுண்டர் செய்து விடுகிறார். அதனைத் தொடர்ந்து உண்மையான குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிப்பதே படத்தின் கதை. மேலும் என்கவுண்டர் ஒரு தீர்வு இல்லை என்பதையும் இந்தப் படம் வலியுறுத்தி இருக்கும். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவியாகா நடிகை மஞ்சு வாரியர் நடித்திருந்தார். பள்ளி ஆசிரியையாக நடிகை துஷாரா விஜயன் நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அமிதாப் பச்சன், ராணா, அபிராமி, அசல் கோலார், ரக்ஷன் என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
இயக்குநர் லோகேஷ் உடன் கூட்டணி வைத்த ரஜினிகாந்த்:
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி வைத்தார். கூலி என்று பெயர் வைக்கப்பட்ட இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேங்ஸ்டராக நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் என பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது வெளியீட்டிற்கான போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தின் ஷூட்டிங்கை முடித்த உடனே நடிகர் ரஜினிகாந்த் அடுத்தப் படத்தின் பணிகளில் உடனே கலந்துகொண்டார். அதன்படி இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
நெல்சனின் ஜெயிலர் படத்தில் இணைந்த ரஜினிகாந்த்:
2023-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் விம்ரசன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பியது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
பான் இந்திய நடிகர்களான மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ஆகியோர் இந்தப் படத்தில் கேமியோ செய்திருந்தனர். படத்தில் ரஜினியின் என்ட்ரிக்கு ரசிகர்கள் திரையரங்கை அதிரவிட்டது போல இவர்களின் என்ட்ரியும் திரையரங்கு அதிர்ந்தது. படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் அடுத்தப் படத்திற்கான லீடை வைத்திருந்தார் நெல்சன். அதன்படி தற்போது இரண்டாம் பாகம் தொடங்கி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
இன்றய இளைஞர்களுக்கு கலாச்சாரம் தெரியவில்லை:
இந்த நிலையில் இன்று சென்னையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் வீடியோ மூலம் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு சில அறிவுறைகளை கூறியுள்ளார். அதில் இளைஞர்கள் இந்திய நாட்டின் கலாசாரம் மற்றும் பெருமைகள் பற்றி அறியாமல் உள்ளனர். இன்றைய காலகட்டத்தில் உள்ள இளைஞர்கள் நமது நாட்டின் கலாசார பெருமைகளைப் பற்றி தெரிந்துகொள்ளாமல் மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றுகிறார்கள்.
மேற்கத்திய நாட்டு மக்கள் அவர்களது நாட்டின் கலாசாரத்தில் அவர்களுக்கு நிம்மதி கிடைக்கவில்லை என்று இந்தியாவை நோக்கி வருகிறார்கள். இதனால் இந்திய நாட்டின் உன்னதமான கலாசாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அந்த வீடியோ மூலம் நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை வைத்தார்.