Kuberaa : தனுஷின் ‘குபேரா’ பட ரிலீஸ் ஒத்திவைப்பா? படக்குழு வெளியிட்ட பதிவு வைரல்!
Kuberaa Movie Release Date Reconfirmed : நடிகர் தனுஷின் முன்னணி நடிப்பில் தெலுங்கு மொழியில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் குபேரா. இந்த படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ள நிலையில், 2025, ஜூன் 20ம் தேதியில் வெளியாகிறது. இந்நிலையில் சமீப நாட்களாக இந்த படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில், படக்குழு பதிவை வெளியிட்டுள்ளது.

தனுஷின் குபேரா
கோலிவுட் சினிமாவையும் கடந்து , பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என அடுத்ததா கட்டத்திற்கு முன்னேறி வருபவர் நடிகர் தனுஷ் (Dhanush). இவரின் இயக்கத்தில் தமிழில் இறுதியாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (Nilavuku En Mel Ennadi Kobam) என்ற படம் வெளியானது. இந்த படத்தில் அறிமுக நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படமானது ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில், அதை அடுத்ததாக அவரின் இயக்கத்திலும், நடிப்பிலும் இட்லி கடை (Idly Kadai) என்ற படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவந்தது. இந்தபடத்தை தொடர்ந்து இவர் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவுடன் (Shekhar Kammula) இணைந்த படம்தான் குபேரா (Kuberaa) . இந்த படமானது தெலுங்கு, தமிழ், இந்தி கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனமானது மிகவும் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளது. இந்த படத்தின் தொடர்பான அறிவிப்புகள் கடந்த 201ம் ஆண்டிலே அறிவிக்கப்பட்ட நிலையில், சுமார் 3 வருடத்திற்கும் மேலாக உருவாகிவந்துள்ளது.
இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் , நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் ஷார்ப் போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்த நடித்துள்ளனர். படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், வரும் 2025, ஜூன் 20ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது . இந்நிலையில் சமீபகாலமாக இந்த படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அதற்குப் படக்குழு விளக்கப் பதிவை வெளியிட்டுள்ளது.
குபேரா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :
20th June 2025.
— Kuberaa Movie (@KuberaaTheMovie) May 22, 2025
சேகர் கம்முலாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷிர்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் நாகார்ஜுனாவும் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள நிலையில், போய்வா நண்பா என்ற பால் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த பதிவில் படக்குழு 2025, ஜூன் 20 என்று கூறியுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
வரிசைகட்டும் தனுஷின் படங்கள் :
நடிகர் தனுஷின் நடிப்பில் ஒன்று ரெண்ட் படங்கள் அல்ல, தமிழில் டி55, டி56, இளையராஜா பயோபிக், விக்னேஷ் ராஜாவுடன் ஒரு படம், வெற்றிமாறனுடன் ஒரு படமும், வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் ஒரு படம் என 4 படங்கள் உள்ளது. மேலும் இவர் இந்தியில் தேரே இஷ்க் மெய்ன் எனப் படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து அப்துல் கலாமின் பயோகிராபி படத்தில் நடிக்கவுள்ளதாகச் சமீபத்தில் அறிவிப்புகள் வெளியானது.
இந்நிலையில் நடிகர் தனுஷின் கைவசம் மட்டுமே கிட்டத்தட்ட 10 படங்கள் வீதம் தனது கைவசம் வைத்துள்ளார் நடிகர் தனுஷ். இயக்குநராகப் படங்களை இயக்குவதை தொடர்ந்து, அவர் தொடர்ந்து மற்ற இயக்குநர்களின் படங்களில் ஒப்பந்தமாகியும் வருகிறார். இவரின் படங்கள் ஆண்டுக்கு 3 எந்த விதத்தில் வெளியானாலும், இவரின் படங்கள் வரிசையாக 4 வருடங்களுக்குத் தொடர்ந்து இருக்கிறது.