Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Dhanush : தனுஷின் இட்லி கடை படத்தின் ஷூட்டிங் ஓவர்… புகைப்படங்களைப் பகிர்ந்த படக்குழு!

Dhanushs Idly Kadai Film Is Wraped : தமிழில் முன்னணி கதாநாயகனாகவும் இயக்குநராகவும் கலக்கி வருபவர் தனுஷ். தற்போது இவரின் இயக்கத்திலும், நடிப்பிலும் உருவாகிவரும் படம் இட்லி கடை. இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், முழுமையாக ஷூட்டிங் நிறைவடைந்ததாகப் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புகைப்படங்களுடன் கூடிய அறிவிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Dhanush : தனுஷின் இட்லி கடை படத்தின் ஷூட்டிங் ஓவர்… புகைப்படங்களைப் பகிர்ந்த படக்குழு!
இட்லி கடை படக்குழு Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 26 Apr 2025 15:58 PM

நடிகர் தனுஷ் (Dhanush) தமிழில் மட்டுமில்லாமல் இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் கதாநாயகனாகப் படங்களில் நடித்து வருகிறார். இவர் படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் படங்களை இயக்கி தயாரித்தும் வருகிறார். சினிமாவில் கமல்ஹாசனை போல பல்வேறு  பணிகளை செய்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ராயன் (Raayan). இந்த படத்தை தனுஷே இயக்கி, அதில் கதாநாயகனாக நடித்திருந்தார். ஆக்ஷ்ன் கட்சிகளுடன் இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து அவரின் இயக்கத்திலும், நடிப்பிலும் அடுத்ததாக உருவாகியுள்ள படம் இட்லி கடை (Idly Kadai). இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகிவந்தது. இந்த படமானது கடந்த 2025, ஏப்ரல் 10ம் தேதியில் ஆரம்பத்தில் வெளியாகவிருந்தது.

பின் இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடையாத நிலையில், ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. மேலும் அனைவரும் எதிர்பார்த்தவண்ணம் இட்லி கடை படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர் தனுஷ் மற்றும் அருண் விஜய்யுடன் (Dhanush and Arun Vijay) படக்குழுவினர் அனைவரும் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. தனுஷின் நடிப்பில் இந்த படமானது பல வித எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ளது. இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

டான் பிக்ச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :

நடிகர் தனுஷின் இந்த இட்டிலி கடை படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்துள்ளார். இவர்கள் இருவரின் ஜோடி திருச்சிற்றம்பலம் படத்தில் பிரபலமான நிலையில், இந்த படத்திலும் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவர்களுடன் நடிகர்கள் ராஜ், கிரண், அருண் விஜய், சமுத்திரக்கனி, ஆர். பார்த்திபன், ஷாலினி பாண்டே மற்றும் பிரகாஷ் ராஜ் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

கிராமத்துக் கதைக்களத்துடன் கூடிய இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இவர் இதற்கு முன் தனுஷின் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்திலும் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இட்லி கடை படத்தின் பாடல்களும் சிறப்பாகத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

தனுஷின் இந்த படமானது வரும் 2025, அக்டோபர் 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு முன் நடிகர் தனுஷின் நடிப்பில் தெலுங்கில் உருவாகிவரும் குபேரா படமானது வெளியாகவுள்ளது. இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் 2025 ஜூன் 20ம் தேதியில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை அடுத்ததாக தனுஷின் தேரே இஷ்க் மெய்ன், டி55, டி56 மற்றும் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் புதிய படம் என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியுள்ளார்.

விஜய் வருகை... மதுரை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!
விஜய் வருகை... மதுரை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!...
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை - எவ்வளவு தெரியுமா?
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை - எவ்வளவு தெரியுமா?...
அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி
அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி...
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்...
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!...
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!...
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்...
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி...
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு...
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!...
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!...