Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ajith Kumar : ‘எதுவாக இருந்தாலும் ஓபனாக கூறிவிடுவேன்’ நடிகர் அஜித்குமார் சொன்ன விஷயம்!

Ajith Kumar Personality : சினிமா மீது சிறுவயதில் இருந்து ஆர்வம் காட்டிவந்தவர் அஜித் குமார். கடந்த 1990ம் ஆண்டு தமிழில் வெளியான என் வீடு என் கனவு என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். இந்நிலையில் மே1ம் தேதியான இன்று அவர் 54வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Ajith Kumar : ‘எதுவாக இருந்தாலும் ஓபனாக கூறிவிடுவேன்’ நடிகர் அஜித்குமார் சொன்ன விஷயம்!
நடிகர் அஜித்குமார்
barath-murugan
Barath Murugan | Published: 01 May 2025 08:30 AM

நடிகர் அஜித் குமாரைப் (Ajith Kumar) பற்றி இந்தியாவில் தெரியாத நபர்களே இருக்க முடியாது, அவர் பான் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானவர் என்று அனைவருக்கும் தெரியும். நடிகர் அஜித் குமார் தமிழில் பல படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். நடிகர் அஜித் குமார் கடந்த 1990ம் ஆண்டு நடிகர் சுரேஷ் மற்றும் நடிகை நதியா நடித்த என் வீடு என் கனவு (En Veedu En Kanavar) என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் நுழைந்தார். இந்த படத்தினை தொடர்ந்து 1993ம் ஆண்டு வெளியா அமராவதி (Amaravathi) என்ற படத்தில் முன்னணி நாயகனாக நடிக்கத் தொடங்கினார். இந்த படத்தை தொடர்ந்து அவர் ஹீரோவாக படங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்த படத்தில் நடிகை சங்கவியுடன் நடித்திருந்தார். மேலும் அடுத்தடுத்த படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து தமிழில் மிகவும் பிரபலமானார். தற்போதுவரை எந்தவித ஆடம்பரமும், பந்தாவும் இல்லாமல் சாதாரண நடிகரைப் போல இருந்து வருகிறார்.

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் குட் பேட் அக்லி. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இந்த படமானது நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். நடிகர் அஜித் குமார் முன்னதாக பேசிய வீடியோ ஒன்றில் அவரின் முன்கோபம் குறித்தும், அவர் மற்றவர்களிடம் நடந்துகொள்வது குறித்தும் ஓபனாக கூறியுள்ளார் அதைப் பற்றிப் பார்க்கலாம்.

நடிகர் அஜித் குமார் அவரின் கேரக்டர் பற்றி பேசிய விஷயம் :

முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் நடிகர் அஜித் குமார் “படங்களில் பார்க்கும் நான், நேரில் அப்படி இருக்கமாட்டேன். எனக்கும் முன்கோபம் மிகவும் அதிகமாக இருக்கும். நான் எனது வாழ்க்கையை நல்ல முறையாக கொண்டு செல்வதற்கு முயல்வேன், அதுபோல என்னிடம் யாராவது எதாவது சொன்னால் வெளிப்படையாக கூறிவிடுவேன். மற்ற எல்லாரையும் போலச் சுத்தி வளைத்துப் பேசமாட்டேன், அமைந்ததில் எதாவது தோன்றினால் ஓபனாகவே அவர்களின் முன்னே கூறிவிடுவேன். யாரிடமும் எதையும் மறைக்க விரும்பமாட்டேன்” என்று நடிகர் அஜித் குமார் வெளிப்படையாக கூறியிருந்தார். இந்த பழைய வீடியோவானது ரசிகர்களிடையே மிகவும் வைரலாகி வருகிறது.

பத்ம பூஷன் பெற்ற அஜித் குமார் :

நடிகர் அஜித் குமார் கலைத்துறையில் சிறந்து விளங்கியதால் காரணமாக இந்திய அரசு அவருக்குப் பத்ம பூஷன் விருதை வழங்கியுள்ளது. நடிகர்கள் சிவாஜி கணேஷின், ரஜினிகாந்த், கமல் ஹாசன் மற்றும் விஜயகாந்த் வரிசையில், நடிகர் அஜித் குமாரும் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக இருக்கும் அஜித் குமாருக்குப் பத்ம பூஷன் விருது கிடைத்த விஷயம் ரசிகர்களைப் பேரானந்தத்தைக் கொடுத்துள்ளது.

பெரூமூச்சு விட்ட பாகிஸ்தான் மக்கள்.. அட்டாரி வாகா எல்லை திறப்பு!
பெரூமூச்சு விட்ட பாகிஸ்தான் மக்கள்.. அட்டாரி வாகா எல்லை திறப்பு!...
ரூ.1.67 கோடி பாக்கி... கூலித் தொழிலாளிக்கு பறந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்
ரூ.1.67 கோடி பாக்கி... கூலித் தொழிலாளிக்கு பறந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்...
பெருமாள் தோளில் கைபோட்டபடி இருக்கும் லட்சுமி கோயில் தெரியுமா?
பெருமாள் தோளில் கைபோட்டபடி இருக்கும் லட்சுமி கோயில் தெரியுமா?...
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை கொண்டாடும் மக்கள் - விமர்சனம் இதோ
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை கொண்டாடும் மக்கள் - விமர்சனம் இதோ...
ராவாக 5 பாட்டில் சரக்கு அடித்த இளைஞர்.. பறிபோன உயிர்!
ராவாக 5 பாட்டில் சரக்கு அடித்த இளைஞர்.. பறிபோன உயிர்!...
மாங்கல்ய பலம் அளிக்கும் ஸ்ரீலாவண்ய கௌரி விரதம்.. எப்படி இருப்பது?
மாங்கல்ய பலம் அளிக்கும் ஸ்ரீலாவண்ய கௌரி விரதம்.. எப்படி இருப்பது?...
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ரெட்ரோ?- எக்ஸ் விமர்சனம்!
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ரெட்ரோ?- எக்ஸ் விமர்சனம்!...
ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?
ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?...
மே தின விடுமுறை.. இன்று இங்கெல்லாம் போகாதீங்க.. முழு லிஸ்ட் இதோ!
மே தின விடுமுறை.. இன்று இங்கெல்லாம் போகாதீங்க.. முழு லிஸ்ட் இதோ!...
நானி நடித்துள்ள 'ஹிட் 3' படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ!
நானி நடித்துள்ள 'ஹிட் 3' படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ!...
மாதத்தின் முதல் நாளே அதிர்ச்சி.. பால் விலை அதிரடி உயர்வு!
மாதத்தின் முதல் நாளே அதிர்ச்சி.. பால் விலை அதிரடி உயர்வு!...