Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

Aamir Khan : ‘கூலி படத்தில் எனக்குக் கதாபாத்திரம் அப்படித்தான் இருக்கும்’ – பாலிவுட் நடிகர் அமீர்கான் பேச்சு!

Aamir Khan Role In Coolie Movie : பிரபல பாலிவுட் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் எனப் பல பணிகளைச் செய்துவருபவர் அமீர்கான். தமிழில் ரஜினியின் கூலி படத்தில் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் நடித்ததை பற்றி அவர் பேசிய விஷயம் பற்றிப் பார்க்கலாம்.

Aamir Khan : ‘கூலி படத்தில் எனக்குக் கதாபாத்திரம் அப்படித்தான் இருக்கும்’ – பாலிவுட் நடிகர் அமீர்கான் பேச்சு!
லோகேஷ் கனகராஜ் மற்றும் அமீர்கான் Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 10 Jun 2025 18:05 PM

கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரின் அதிரடி நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் படமான் கூலி (Coolie). இந்த படத்தை விஜய்யின் (Vijay) லியோ (Leo) படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியுள்ளார். இந்த படத்தினை இயக்குவதாகக் கடந்த 2023ம் ஆண்டு இறுதியிலே அறிவிப்புகள் வெளியாகியிருந்தது. அதைத் தொடர்ந்து கடந்த 2024ம் ஆண்டு முழுவதும் கூலி படத்தின் ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் மிகவும் பிசியாக இருந்தார். நடிகர் ரஜினிகாந்த் இந்த கூலி படத்தில் மிக சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் அவருடன் பான் இந்திய மொழி நடிகர்கள் நாகார்ஜுனா (Nagarjuna), உபேந்திர ராவ் மற்றும் பாலிவுட் நடிகர் அமீர்கான் (Aamir Khan) எனப் பல உச்ச நடிகர்களும் இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இப்படமானது மிகவும் பிரம்மாண்டமான படமாகத் தயாராகியுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய பாலிவுட் நடிகர் அமீர்கான் , கூலி படத்தைத் தான் நடித்த கதாபாத்திரம் பற்றிப் பேசியிருக்கிறார்.

நடிகர் அமீர்கான் பேசிய விஷயம் :

சமீபத்தில் பாலிவுட்டில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் அமீர்கான் ரஜினியுடன் கூலி படத்தில் நடித்திருந்த கதாபாத்திரம் பற்றிக் கூறியிருக்கிறார். அதில் அவர் “என்னுடைய கதாபாத்திரம் கூலி படத்தில் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும், மேலும் அந்த கதாபாத்திரம் நிச்சயமாக அனைவருக்கும் பிடிக்கும்” என்று நடிகர் அமீர்கான் கூறியிருக்கிறார். தற்போது இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கூலி படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

நடிகர் ரஜினிகாந்த்தின் இந்த கூலி படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகர்கள் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், ரேபா மோனிகா ஜான் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர். மேலும் இப்படத்தில் அமீர்கான் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். இந்த படமானது அதிரடி ஆக்ஷ்ன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கூலி படம் ரசிகர்களுக்கு ஏற்ற சர்ப்ரைஸான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சிறப்புப் பாடலுக்கு நடிகை பூஜா ஹெக்டே நடனமாடியுள்ளார். இவை ரெட்ரோ படத்தைத் தொடர்ந்து தமிழில் இப்படத்திலும் நடித்திருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத்தின் இசையமைப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நினைத்தது நிறைவேறும்.. உறையூர் வெக்காளியம்மன் கோயில் சிறப்புகள்!
நினைத்தது நிறைவேறும்.. உறையூர் வெக்காளியம்மன் கோயில் சிறப்புகள்!...
அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?
அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?...
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!...
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!...
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்..
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்.....
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!...
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?...
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது..
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது.....
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!...
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!...