திமுக வலுவான எதிர்க்கட்சியாக செயல்படும்.. தவெக அரசு அமைக்க முட்டுக்கட்டை போடும் அதிமுக பாஜக – எம்.பி கலாநிதி வீராசாமி..
இந்த பரபரப்பான அரசியல் சூழலில், திமுக மற்றும் அதிமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. 1979ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், சில காரணங்களால் அது பின்னர் கைவிடப்பட்டதாகவும் அரசியல் வரலாறு கூறுகிறது.

கோப்பு புகைப்படம்
மே 7, 2026: திமுக வலுவான எதிர்க்கட்சியாக செயல்படும் என திமுக எம்பி கலாநிதி வீராசாமி குறிப்பிட்டுள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையான கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த சூழலில், தமிழக வெற்றி கழகத்தால் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற திமுக எதிர்க்கட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
விஜய் பதவியேற்பில் நீடிக்கும் சிக்கல்:
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அனுமதி கோரியிருந்தார். ஆனால், பெரும்பான்மை இல்லாத சூழலில் தற்போது வரை அவருக்கு முதலமைச்சராக பதவியேற்க அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
மேலும் படிக்க: தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்கட்டும்.. 6 மாதங்கள் இடையூறு செய்யாமல் பார்ப்போம் – மு.க ஸ்டாலின்..
இந்த சூழல் ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் திமுக மற்றும் அதிமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. அதாவது, திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருவதாக கூறப்பட்டது.
திமுக அதிமுக பேச்சுவார்த்தை?
முன்னதாக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிக்கலாம் என பேச்சுகள் எழுந்தன. ஆனால், “அதிமுக ஒருபோதும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தராது” என கே.பி. முனுசாமி தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில், திமுக மற்றும் அதிமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. 1979ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், சில காரணங்களால் அது பின்னர் கைவிடப்பட்டதாகவும் அரசியல் வரலாறு கூறுகிறது.
திமுக வலுவான எதிர்க்கட்சியாக செயல்படும்:
DMK has decided to function as an effective opposition despite congress betrayal (and perhaps other alliance parties) . ADMK IS PUSHING BJP TO STOP TVK FORMING GOVT. That is disrespecting people’s mandate. Hope democracy prevails @DMK4TN
— Dr.Kalanidhi Veeraswamy (@DrKalanidhiV) May 6, 2026
இந்த வரலாறு மீண்டும் திரும்புமா? திமுக – அதிமுக இணையுமா? என்ற பல்வேறு கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ள சூழலில், “திமுக வலுவான எதிர்க்கட்சியாக செயல்படும்” என திமுக எம்பி கலாநிதி வீராசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “காங்கிரஸ் மற்றும் துரோக அரசியலுக்கு மத்தியில் திமுக வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட முடிவு செய்துள்ளது. அதிமுகவும் பாஜகவும் தமிழக வெற்றி கழகத்தை ஆட்சி அமைப்பதிலிருந்து தடுக்க முயற்சிக்கின்றன. இது மக்கள் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அதிமுகவும் பாஜகவும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆட்சி அமைக்க இடையூறு செய்வதாகவும், தமிழக வெற்றி கழகத்தை ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.