கிரெடிட் கார்டு பயனர் இறந்துவிட்டால் கடனை யார் செலுத்த வேண்டும்?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்! | TV9 Tamil News

கிரெடிட் கார்டு பயனர் இறந்துவிட்டால் கடனை யார் செலுத்த வேண்டும்?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Published: 

09 May 2026 22:41 PM

 IST

Important Facts About Credit Card | தற்போதைய சூழலில் பெரும்பாலான பொதுமக்கள் தங்களது கூடுதல் நிதிக்காக கிரெடிட் கார்டு பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், கிரெடிட் கார்டு பயனர் திடீரென உயிரிழந்துவிட்டால் அவர் பெற்ற கடனுக்கு யார் பொறுப்பாவார்கள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 / 5தற்போதைய காலக்கட்டத்தில் தங்களது கூடுதல் நிதி தேவைகளுக்காக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக கிரெடிட் கார்டு பயன்பாடு பொதுமக்கள் மத்தியில் பரவாலக உள்ளது. இருப்பினும் பலருக்கு எவ்வாறு முறையாக கிரெடிட் கார்டு பயன்படுத்துவது என்று தெரியவில்ல. 

தற்போதைய காலக்கட்டத்தில் தங்களது கூடுதல் நிதி தேவைகளுக்காக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக கிரெடிட் கார்டு பயன்பாடு பொதுமக்கள் மத்தியில் பரவாலக உள்ளது. இருப்பினும் பலருக்கு எவ்வாறு முறையாக கிரெடிட் கார்டு பயன்படுத்துவது என்று தெரியவில்ல. 

2 / 5

அந்த வகையில் பலருக்கும் தெரியாத ஒன்று தான், கிரெடிட் கார்டு பயனர் இறந்த பிறகு அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வது என்பது. இந்த நிலையில், கிரெடிட் கார்டு பயனர் உயிரிழந்துவிட்டால் அந்த கடனுக்கு யார் பொறுப்பு ஏற்க வேண்டும் அதற்கான விதிகள் கூறுவது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

3 / 5

வங்கிகள் மூலம் பெறும் பெரும்பாலான கடன்களுக்கு பிணையம் அவசியமான ஒன்றாக உள்ளது. உதாரணமாக நகை கடனுக்கு நகை, வீட்டு கடனுக்கு வீட்டின் பத்திரம் ஆகியவற்றை பிணையமாக வழங்க வேண்டும். இந்த நிலையில், கிரெடிட் கார்டுக்கு எந்த வகை பிணையமும் கேட்கப்படுவதில்லை. 

4 / 5

இந்த நிலையில், கிரெடிட் கார்டு யாரின் பெயரில் உள்ளதோ அவர் தான் அந்த கிரெடிட் கார்டு கடனுக்கான பொறுப்பை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த விதி அந்த நபர் கிரெடிட் கார்டு கடன் பெற்றுவிட்டு உயிரிழந்துவிட்டாலும் பொருந்தும். உதாரணமாக ஒருவர் கிரெடிட் கார்டு மூலம் கடன் பெற்றுவிட்டு உயிரிழந்துவிட்டால் அவரின் அசையா சொத்துக்களை வைத்து வங்கிகள் நடவடிக்கை எடுக்கலாம். 

5 / 5

கிரெடிட் கார்டு கடனை வாரிசுகள் செலுத்த வேண்டுமா என்பது குறித்த கவலை தான் பலருக்கும் இருக்கும். ஆனால், அதற்கு எந்தவிதமான கட்டாயமும் இல்லை. இந்த விவகாரத்தில் ஒருவர் கிரெடிட் கார்டு கடன் பெற்றுவிட்டு உயிரிழந்துவிட்டால் அவரது மனைவி, பிள்ளைகள்  என யாரும் அந்த கடனை செலுத்த வேண்டும் என்று வங்கிகள் நெருக்கடி கொடுக்காது. 

Follow Us