விர்ச்சுவல் கிரெடிட் கார்டு என்றால் என்ன? அதனால் கிடைக்கும் 7 நன்மைகள்

Virtual Credit Score : 2025-இல் விர்ச்சுவல் கிரெடிட் கார்டுகள் நிதி மேலாண்மைக்கு முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகின்றன. காரணம் இவை பாதுகாப்பானதாக பார்க்கப்படுவதால் தனி நபர்களுக்கு மட்டுமல்லாமல் வணி நிறுவனங்களுக்கும் ஏற்றதாக பார்க்கப்படுகிறது. விர்ச்சுவல் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதால் கிடைக்கும் 7 நன்மைகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

விர்ச்சுவல் கிரெடிட் கார்டு என்றால் என்ன? அதனால் கிடைக்கும் 7 நன்மைகள்

மாதிரி புகைப்படம்

Published: 

13 May 2025 21:20 PM

இந்த நவீன யுகத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பும் வசதியும் முக்கியமாக இருக்கிறது. இணைய வழி மோசடிகள் அதிகரித்து வரும் சூழலில், வழக்கமான கிரெடிட் கார்டுகளை (Credit Card) விட விர்ச்சுவல் கிரெடிட் கார்டுகள் அதற்கு தீர்வாக பார்க்கப்படுகிறது. மேலும் பாதுகாப்பான மற்றும் சிக்கனமான செலவுகளை இவ்வகை கிரெடிட் கார்டுகள் உறுதி செய்கின்றன. வழக்கமாக நாம் பயன்படுத்தும் கிரெடிட் கார்டுகள் போலவே செயல்படும் இந்த விர்சுவல் கிரெடிட் கார்டுகள் (Virtual Credit Cards), ஆன்லைனில் பாதுகாப்பான முறையில் பணம் செலுத்துவதற்கும், திருட்டை தவிர்ப்பதற்கும் முக்கிய பங்காற்றுகின்றன. தற்போது பல வங்கிகள் இலவசமாகவும் வழங்குகின்றன.

2025-இல் விர்ச்சுவல் கிரெடிட் கார்டுகள் வழங்கும் முக்கிய 7 நன்மைகள்

பாதுகாப்பான ஆன்லைன் ஷாப்பிங்

வழக்கமான பிரச்னைகள் இல்லாமல் ஆன்லைனில் பொருட்கள் வாங்க விர்ச்சுவல் கிரெடிட் கார்டு சிறந்த தேர்வாக இருக்கிறது. கார்டுகளைப் பயன்படுத்த ஒவ்வொரு முறையும் புதிய எண் வழங்கப்படும். இதன் மூலம் உங்கள் பழைய கார்டு விவரங்களை பகிராமல், நேரடியாக  புதியா கார்டு விவரங்களை மட்டுமே பயன்படுத்தி உபயோகப்படுத்தலாம். இதனால் திருட்டு மற்றும் மோசடிகளைத் தவிர்க்க முடியும்.

செலவுகளை கட்டுப்படுத்தும் வசதி

இந்த விர்ச்சுவல் கிரெடிட் கார்டுகளில் செலவு வரம்புகளை நீங்கள் முன்பே நிர்ணயிக்கலாம். இது உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த உதவுவதுடன், மாத இறுதியில் அதிக பில்லிங் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

மோசடிகளை தடுக்கும் பாதுகாப்பு

 பணப்பரிவர்த்தனைகளின் போது விர்ச்சுவல் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி, பாதுகாப்பான முறையில் பணம் அனுப்புவதால் மோசடிகளை குறைக்க முடிகிறது.

குறைந்த கட்டணம்

பல வங்கிகள் இந்த வகை கார்டுகளை இலவசமாக வழங்குகின்றன. கார்டுகளை பயன்படுத்த அடிக்கடி பணம் செலுத்த வேண்டிய அவசியமின்றி, உங்கள் பஜட்டில் பாதிப்பு ஏற்படாது.

மோசடி மற்றும் டேட்டா திருட்டிலிருந்து பாதுகாப்பு

ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தனி கார்டு எண் உருவாக்கப்படும். இதனால், அந்த விவரங்களை மீண்டும் பயன்படுத்த முடியாது. உங்கள் உண்மையான கார்டு விவரங்கள் வெளிப்படாமல் இருப்பது முக்கிய பலமாகும்.

ஹேக் செய்யப்படுவது தடுக்கப்படும்

பணப்பரிவர்த்தனைகளின் போது நீங்கள் உண்மையான கார்டு விவரங்களை வழங்கப்போவதில்லை என்பதால் அவை ஹேக் செய்யப்பட்டாலும்கூட, உங்கள் பொருளாதார தகவல்கள் பாதிக்காது.

டிஜிட்டல் வாலெட்டில் இணைப்பு

Google Pay, PhonePe, Paytm போன்ற டிஜிட்டல் வாலெட்டுகளுடன் இந்த கிரெடிட் கார்டு இணைக்கப்படும். எனவே இது பரிவர்த்தனைகளை இன்னும் எளிமையாக மாற்றுகிறது.

2025-இல் விர்ச்சுவல் கிரெடிட் கார்டுகள் ஏன் முக்கியம்?

நவீன உலகில் பாதுகாப்பும், வசதியும் மிக முக்கியமானவை. விர்ச்சுவல் கிரெடிட் கார்டுகள் இவற்றை ஒரே நேரத்தில் வழங்குவதால், தற்போது பலரும் பண பரிவர்த்தனைகளில் இதனை தேர்வு செய்கின்றனர். தனி நபர்களுக்கு மட்டுமல்லாமல் வணிக நிறுவனங்களுக்கும் நிதி மேலாண்மைக்கு அத்தியாவசியமாக இருக்கிறது.