Credit Card : சிலருக்கு கிரெடிட் கார்டுகள் சிக்கலை ஏற்படுத்தலாம்.. ஏன்?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Who needs to Avoid Credit Cards | இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் கிரெடிட் கார்டுகளை வழங்கி வருகின்றன. இந்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்துக்கொண்டு பணத்தை மாத தவணையாக திருப்பி செலுத்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால், கிரெடிட் கார்டு சிலருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் ஆபத்தை கொண்டுள்ளது.

Credit Card : சிலருக்கு கிரெடிட் கார்டுகள் சிக்கலை ஏற்படுத்தலாம்.. ஏன்?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

மாதிரி புகைப்படம்

Published: 

15 May 2025 18:29 PM

வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தேவையான பல சிறப்பு அம்சங்களை வழங்கி வருகின்றன. அத்தகைய சேவைகளில் ஒன்றுதால் கிரெடிட் கார்டு (Credit Card). வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்வது, பணத்தை எடுப்பது உள்ளிட்ட தேவைகளை தாண்டி பெரும்பாலான நபர்கள் கடன் பெற வங்கிகளை நாடுகின்றனர். கல்வி, வீடு கட்டுதல், வாகனம் வாங்குதல் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்காகவும் வங்கிகளில் கடன் வாங்கிக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி ஏராளமான மக்கள் கடன் வாங்கி தங்களது தேவைகளை பூர்த்தி  செய்து வருகின்றனர்.

கிரெடிட் கார்டு மூலம் பயன்பெறும் சாமானிய மக்கள்

ஆனால், பெரும்பாலான மனிதர்களுக்கு பெரிய அளவிலான கடன்களை விடவும் சிறிய அளவிலான கடன்கள் அதிகம் தேவைப்படுகின்றன. தங்களது அன்றாட வாழ்வில் ஏற்படும் சின்ன சின்ன செலவுகளை ஈடுகட்ட அவர்களுக்கு சிறிய அளவிலான தொகை தேவைப்படுகிறது. இந்த சிறிய தொகைக்காக வங்கிகளில் கடன் பெற முடியாது. எனவே தான் வங்கிகள் கிரெடிட் கார்டு திட்டத்தை வைத்துள்ளன.

அவற்றை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்துக்கொண்டு பணத்தை மாத தவணையாக திருப்பி செலித்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.  என்னதான் கிரெடிட் கார்டுகள் இத்தனை சிறப்பு அம்சங்களை கொண்டு இருந்தாலும், அதில் சில சிக்கல்களும் உள்ளன. குறிப்பாக சிலர் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவது அதிக நிதி இழப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், யார் யார் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

யார் கிரெடிட் கார்டு பயன்படுத்த கூடாது?

அதிக ஷாப்பிங் செய்யும் நபர்கள்

சிலருக்கு அதிகமாக ஷாப்பிங் செய்யும் பழக்கம் இருக்கும். அவர்கள் உடைகள், ஆபரணங்கள் என  தங்களுக்கு தேவையானை பொருட்களை வாங்கிக்கொண்டே செல்வார்கள். இந்த நிலையில், ஒரு கார்டின் அளவு முடிந்தால் மற்றொரு புதிய கார்டு என அவர்களின் கிரெடிட் கார்டு பழக்கம் தொடர்ந்துக்கொண்டே போகும். இத்தகைய சூழலில் கிரெடிட் கார்டின் வட்டி விகிதம் அதிகரித்து கடனை அடைக்கவே முடியாது சூழல் ஏற்பட்டுவிடும்.

மாத தவணை

கிரெடிட் கார்டு தொகையை திருப்பி செலுத்தும் மாத தவணையில் சிலர் தவறு செய்கின்றனர். அதாவது கிரெடிட் கார்டை முழுவதுமாக பயன்படுத்திவிட்டு மொத்த தொகையை மிக குறைந்த அளவில் பிரித்து மாத தவணை செலுத்துகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் வட்டி விகிதம் கூடிக்கொண்டே போகும்.

அதிக கடன் உள்ளவர்கள்

ஏற்கனவே வங்கியில் கடன் வாங்கியுள்ளவர்கள் கிரெடிட் கார்டு வாங்குவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு ஏற்கனவே கடன் இருக்கும் பட்சத்தில் மீண்டும் கடன் வாங்கினால் அது கிரெடிட் ஸ்கோரை மிக கடுமையாக பாதிக்கும். இதன் காரணமாக வங்கிகளில் கடன் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது.