Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

யுபிஐ பரிவர்த்தனை விதிகளில் வந்த முக்கிய மாற்றம்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

NPCI's New UPI Rules | என்பிசிஐ சமீபத்திய அறிவிப்பின்படி, சர்வதேச யுபிஐ பரிவர்த்தனைகளில் QR கோடு பகிர்வு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் உள்நாட்டு பரிவர்த்தனைகளை பாதிக்காது. இந்த தடை, வெளிநாட்டு வணிகர்கள் என்பிசிஐ விதிகளுக்கு உட்பட்டவர்களாக இல்லாததால் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில், என்பிசிஐ-ன் இந்த புதிய விதி குறித்து விரிவாக பார்க்கலாம்.

யுபிஐ பரிவர்த்தனை விதிகளில் வந்த முக்கிய மாற்றம்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 14 Apr 2025 00:12 AM

NPCI (National Payments Corporation of India) எனப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம், பண பரிவர்த்தனைகளை கண்காணித்து வரும் நிலையில், பணப் பரிவர்த்தனை தொடர்பான சில முக்கிய விதிகளை அவ்வப்போது அறிவித்தும், விதிகளில் மாற்றமும் செய்து வருகிறது. அந்த வகையில் என்சிபிஐ சமீபத்தில் சில முக்கிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த விதிகள் கூகுள் பே (Google Pay), போன் பே (Phone Pe) உள்ளிட்ட அனைத்து விதமான யுபிஐ (UPI – Unified Payment Interface) பண பரிவர்த்தனைகளை செயலிகளுக்கும் பொருந்தும். ஒரு சில வகையான பண பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த விதிகள் கொண்டுவரப்பட்டு இருந்தாலும், இதன் காரணமாக பண பரிவர்த்தனை மேற்கொள்வதில் சில சிக்கலகள் ஏற்படலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் யுபிஐ பண பரிவர்த்தனைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள புதிய விதிகள் என்ன, இதன் காரணமாக என்ன என்ன மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

QR கோடு பகிர்ந்து பண பரிவர்த்தனை செய்ய முடியாது

யுபிஐ செயலிகளில் QR (Quick Response) கோடு பகிர்ந்துன் பண பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான ஒரு அம்சம் உள்ளது. இதன் மூலம் மொபைல் எண் இல்லமால் QR கோடுகளை பகிர்ந்து பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். இதில் தான் தற்போது ஒரு புதிய விதி கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, QR ஷேர் மற்றும் பே மூலம் செய்யப்படும் யுபிஐ பண பரிவர்த்தனைகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்த விதி மாற்ற சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும். உள்நாட்டில் பண பரிவர்த்தனை செய்பவர்கள் வழக்கம் போல பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். ஆனால், அவ்வாறு உள்நாட்டு பரிவர்த்தனை செய்யும் நபர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏன் வெளிநாட்டு பண பரிவர்த்தனைகளுக்கு இந்த விதி அமல்படுத்தப்பட்டுள்ளது?

மொரிஷியஸ், நேபாளம், சிங்கப்பூர், பிரான்ஸ், இலங்கை மற்றும் யுஏஐ உள்ளிட்ட நாடுகள் இந்தியாவின் யுபிஐ சேவையை பயனபடுத்துகின்றன. இந்த நாடுகளில் யுபிஐ பயன்படுத்தி பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோல அங்கு செல்லும் இந்தியர்களுக்கு யுபிஐ பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. அங்கு இருக்கும் இந்தியர்கள் பொருட்களை வாங்கிவிட்டு QR கோடு மூலம் கட்டணத்தை செலுத்தி வந்தனர். யுபிஐ பண பரிவர்த்தனை வணிக ரீதியாக செய்யப்படுகின்றன. ஆனால், இந்த நாடுகளில் இருக்கும் வணிகர்கள் இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் விதிகளுக்கு உட்பட்டவர்களாக இருக்க மாட்டார்கள். இதன் காரணமாகவே இந்த விதி நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உயர் கல்விக்கு வழிகாட்டுதல் வேண்டுமா? - ஆலோசனை எண் இதோ!
உயர் கல்விக்கு வழிகாட்டுதல் வேண்டுமா? - ஆலோசனை எண் இதோ!...
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களில் லிஸ்ட் தெயுமா?
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களில் லிஸ்ட் தெயுமா?...
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர் இறந்தால் கடனை யார் செலுத்துவது?
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர் இறந்தால் கடனை யார் செலுத்துவது?...
மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருமணம்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?
மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருமணம்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?...
நெகட்டிவ் விமர்சனங்களில் இருந்து கற்றுக்கொண்டே வளர்கிறேன்...
நெகட்டிவ் விமர்சனங்களில் இருந்து கற்றுக்கொண்டே வளர்கிறேன்......
துரைமுருகன், ரகுபதிக்கு இலாகா மாற்றம்.. அதிரடி அறிவிப்பு
துரைமுருகன், ரகுபதிக்கு இலாகா மாற்றம்.. அதிரடி அறிவிப்பு...
விபரீத முடிவு எடுத்த தஞ்சை மாணவி.. ரிசல்ட்டில் அதிர்ச்சி!
விபரீத முடிவு எடுத்த தஞ்சை மாணவி.. ரிசல்ட்டில் அதிர்ச்சி!...
12 ஆம் வகுப்பு துணை தேர்வு எப்போது? - அமைச்சர் முக்கிய தகவல்!
12 ஆம் வகுப்பு துணை தேர்வு எப்போது? - அமைச்சர் முக்கிய தகவல்!...
தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து சொன்ன தவெக தலைவர் விஜய்..
தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து சொன்ன தவெக தலைவர் விஜய்.....
பதஞ்சலி சொல்லும் உணவு ரகசியம்.. ஆரோக்கியம் மேம்பட சில விதிகள்!
பதஞ்சலி சொல்லும் உணவு ரகசியம்.. ஆரோக்கியம் மேம்பட சில விதிகள்!...
மீண்டும் ஓய்வு குறித்த கேள்வி.. சட்டென மாறிய தோனி முகம்..!
மீண்டும் ஓய்வு குறித்த கேள்வி.. சட்டென மாறிய தோனி முகம்..!...