ஆதார் கார்டை மிஸ் பண்ணிட்டீங்களா? ஆன்லைனில் டூப்ளிகேட் ஆதார் கார்டு பெறுவது எப்படி?

How to recover Aadhaar : இந்தியாவில் மருத்துவ சேவைகள், அரசின் திட்டங்களை பெற போன்ற அனைத்து சேவைகளுக்கும் ஆதார் மிகவும் அவசியம். எதிர்பாராதவிதமாக ஆதாரை தொலைத்துவிட்டாலோ அல்லது ஆதார் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்துவிட்டாலோ கவலைப்படத் தேவையில்லை. உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்ய முடியும்.

ஆதார் கார்டை மிஸ் பண்ணிட்டீங்களா? ஆன்லைனில் டூப்ளிகேட் ஆதார் கார்டு பெறுவது எப்படி?

மாதிரி புகைப்படம்

Updated On: 

26 May 2025 18:13 PM

இந்திய அரசின் சார்பில் யூனிக் ஐடெண்டிஃபிகேஷன் ஆத்தாரிட்டி ஆஃப் இந்தியா (UIDAI) வழங்கும் 12 இலக்க அடையாள எண்  கொண்ட ஆதார் கார்டு (Aadhaar), தற்போது நாட்டின் முக்கியமான அடையாள ஆவணமாக செயல்படுத்தப்படுகிறது. வங்கி சேவைகள், அரசு நலத்திட்டங்கள், அடையாளச் சான்று, முகவரி சான்று என பல்வேறு தேவைகளுக்கு ஆதார் மிகவும் அவசியமாகிறது. இந்த நிலையில், ஆதார் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்து பயன்பாடிற்கு உதவாத நிலையில் இருந்தாலோ கவலைப்பட தேவையில்லை. ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தே டுப்ளிக்கேட் ஆதார் கார்டை எளிதாக பெறலாம்.  கீழ்க்காணும் எளிய படிகளைப் பின்பற்றி டூப்ளிகேட் ஆதார் கார்டைப் பெறலாம்.

டூப்ளிக்கேட் ஆதார் கார்டை ஆன்லைன் மூலம் பெறுவது எப்படி?

  • முதலில் https://uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • முகப்புப் பக்கத்தில் இருக்கும் My Aadhaar’ என்ற மெனுவை கிளிக் செய்யவும்.
  • அந்த பகுதியில் உள்ள பல்வேறு சேவைகளில் இருந்து ‘Order Aadhaar Reprint என்ற ஆப்சனைத் தேர்வு செய்யவும்.
  • 12 இலக்க ஆதார் எண் அல்லது 16 இலக்க Virtual ID ஐ பதிவிட்ட பிறகு, பக்கத்தில் காட்டப்படும் கேப்ட்சா (CAPTCHA) என்பதைத் தேர்ந்தெடுத்து கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.
  • உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP எண்ணை பதிவிட்டு உறுதிபடுத்தவும்.
  • OTP சரிபார்ப்பு முடிந்தவுடன், உங்கள் ஆதார் விவரங்கள் திரையில் தோன்றும். அவற்றை சரிபார்த்து, ரீபிரிண்ட் சேவைக்கான கட்டணத்தை செலுத்தவும்.
  • கட்டணம் செலுத்திய பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு புதிய ஆதார் கார்டு அனுப்பப்படும். இதற்கான Service Request Number  எண்ணும் உங்களுக்கு கிடைக்கும்.
  • உடனடி தேவைக்கு, நீங்கள் UIDAI இணையதளத்தில் இருந்து e-Aadhaar ஐ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். இது உடனடியாக கிடைக்கும் என்பதால் அவசர தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • உங்கள் மீள்பதிப்பு விண்ணப்பத்தின் நிலையை தெரிந்துகொள்ள, UIDAI இணையதளத்தில் Check Aadhaar Reprint Status பகுதியில் ஆதார் எண்ணை பதிவிட்டு சரிபார்க்கலாம்.
  • கூடுதல் உதவி அல்லது சந்தேகங்களுக்கு, UIDAI-யின் தொலைபேசி எண்: 1947 அல்லது, email: phonehelp@uidai.gov.in முகவரி மூலம் தொடர்புகொள்ளலாம்.

ஆதார் கார்டு இழந்துவிட்டால் அதற்காக பதட்டமடைய வேண்டியதில்ல. தற்போது UIDAI வழங்கும் ஆன்லைன் சேவைகள் மூலம், உங்கள் ஆதார் கார்டை மீண்டும் பெற்றுக்கொள்வது மிக எளிமையான செயலாக மாறிவிட்டது. மேலே கூறப்பட்ட படிகள் மூலம், உங்களுடைய ஆதார் கார்டை வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து ஆதார் கார்டை பெறலாம். மேலும் அவசர தேவைகளுக்கு விண்ணப்பித்த பிறகு இ-ஆதார் டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம்.