இனி புக் செய்த ரயில் டிக்கெட்டில் தேதியை மாற்றம் செய்யலாம்.. ஆனால் சில் Conditions!
New Rules in Indian Railway Ticket Booking | இந்திய ரயில்வேயின் ரயில் சேவையை பயன்படுத்தி ஏராளமான பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்திய ரயில்வேயில் 2026 ஜனவரி மாதம் முதல் புதிய மாற்றம் அமலுக்கு வர உள்ளதாக இந்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.

மாதிரி புகைப்படம்
இந்திய ரயில்வேயின் (Indian Railway) கீழ் இயங்கும் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பொதுமக்கள் ரயில் டிக்கெட்டில் இருக்கு பெயரை மாற்றம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மேலும் ஒரு அட்டகாசமான அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்திய ரயில்வேயின் கீழ் இயங்கும் ரயில்களில் பயணம் செய்யும் பொதுமக்கள் இனி ரயில் பயணத்திற்கான தேதியை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரயில் பயணத்தை அதிகம் பயன்படுத்தும் பொதுமக்கள்
இந்தியாவை பொருத்தவரை லட்சக்கணக்கான பொதுமக்கள் ரயில் பயணத்தை அதிகம் விரும்புகின்றனர். குறைந்த செலவில் அதிக தூரம் பயணம் செய்ய முடியும் என்பதால் பெரும்பாலான மக்களின் முன்னணி தேர்வாக இது உள்ளது. ரயிலில் பயணம் செய்யும் பொதுமக்களுக்காக இந்திய ரயில்வே அவ்வப்போது பல அசத்தல் அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் பொதுமக்கள் தங்களது ரயில் பயணத்தின் தேதியை மாற்றம் செய்துகொள்ளலாம் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : தனிநபர் கடன் வாங்க போறீங்களா?.. இந்த 5 தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்!
ரயில் டிக்கெட்டில் பயண தேதியை மாற்றம் செய்துக்கொள்ளலாம்
ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்றால் குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். இத்தகைய சூழலில் முன்பதிவு செய்த தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் திட்டம் மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதேபோல வேறு தேதியில் பயணம் செய்ய வேண்டிய தேவையும் ஏற்படலாம். இந்த நிலையில், ரயில் டிக்கெட் பயண தேதி மாற்றம் செய்ய முடியாமல் பெரும்பாலான பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்திப்பர்.
இதையும் படிங்க : PPF, NSC திட்டங்களை விட அதிக வட்டி கிடைக்கும் அஞ்சலக சேமிப்பு திட்டம்.. எது தெரியுமா?
இந்த நிலையில் தான் இந்திய ரயில்வே ஒரு அசத்தலான அம்சம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது 2026 ஜனவரி மாதம் முதல் பொதுமக்கள் தாங்கள் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டின் தேதியை மாற்றம் செய்துக்கொள்ளலாம் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார். இந்த தேதி மாற்றத்தில் உறுதியாக டிக்கெட் கிடைக்கும் என உத்தரவாதம் வழங்க முடியாது என்றும் இருக்கைகளின் இருப்பை பொருத்து டிக்கெட் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி இதுபோன்ற பயண தேதியை மாற்றம் செய்யும்போது கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இது மில்லியன் கணக்கான ரயில் பயனர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.