வைப்பு நிதி திட்டங்களில் முறையாக முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம்.. அதற்கு இவற்றில் கவனமாக இருக்க வேண்டும்! | TV9 Tamil News

வைப்பு நிதி திட்டங்களில் முறையாக முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம்.. அதற்கு இவற்றில் கவனமாக இருக்க வேண்டும்!

Updated On: 

28 Apr 2026 00:06 AM

 IST

Correct Way To Invest In Fixed Deposit Schemes | இந்தியர்களுக்கான மிக நம்பகத்தன்மை உடன் கூடிய திட்டமாக வைப்பு நிதி உள்ளது. இந்த நிலையில், வைப்பு நிதி திட்டத்தில் முறையாக முதலீடு செய்து அதிக லாபம் பெறுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

1 / 5இந்தியாவை பொருத்தவரை சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும் என நினைக்கும் பொதுமக்கள் முதலில் யோசிப்பது வைப்பு நிதி குறித்து தான். சாமானிய மக்களின் பாதுகாப்பான தேர்வாக இது உள்ளது. இந்த நிலையில், வைப்பு நிதி திட்டங்களில் சிறந்த முறையில் முதலீடு செய்து லாபம் பார்ப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவை பொருத்தவரை சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும் என நினைக்கும் பொதுமக்கள் முதலில் யோசிப்பது வைப்பு நிதி குறித்து தான். சாமானிய மக்களின் பாதுகாப்பான தேர்வாக இது உள்ளது. இந்த நிலையில், வைப்பு நிதி திட்டங்களில் சிறந்த முறையில் முதலீடு செய்து லாபம் பார்ப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

2 / 5

வைப்பு நிதிக்கு மிக முக்கியமானதே வட்டி தான். எனவே அதிக வட்டி உடன் கூடிய திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் பெற முடியும். அதாவது ஒருவர் 7 சதவீதம் வட்டி கொண்ட திட்டத்தில் ரூ.1.5 லட்சம் முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். 5 வருடங்களுக்கு முதலீடு செய்யும் பட்சத்தில் அது ரூ.2,10,382 மாறும். 

3 / 5

இதுவே நீங்கள் சுமார் 8 சதவீதம் வட்டி வழங்க கூடிய ஒரு திட்டத்தில் மொத்தம் 5 ஆண்டுகளுக்கு ரூ.1.5 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். திட்டத்தின் முடிவில் நீங்கள் ரூ.2,20,399 பெற்றிருப்பீர்கள். அதாவது கூடுதலாக ரூ.10,000 பெற்றிருப்பீர்கள். ஒரு சதவீத வட்டி மாற்றம் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும்.

4 / 5

வட்டி கணக்கிடப்படும் காலவரையறை குறைய குறைய பணம் வேகமாக பெருகும். உதாரணமாக ஒருவர் ரூ.1.5 லட்சம் பணத்தை 8 சதவீதம் வட்டி வரக்கூடிய ஒரு திட்டத்தில் முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த திட்டத்தில் எப்போது வட்டி கணக்கிடப்படுகிறதோ அதற்கு ஏற்ப லாபம் பெருகும். 

5 / 5

உதாரணமாக வருடம் எனில் ரூ.2,20,399 ஆக இருக்கும். அரையாண்டு எனில் ரூ.2,22,036 ஆக இருக்கும். இதுவே காலாண்டு எனில் ரூ.2,22,892 ஆக இருக்கும். ஒவ்வொரு மாதத்திற்கு வட்டி கணக்கிடப்படுகிறது என்றால் முதலீடு ரூ.2,23,476 ஆக மாறி இருக்கும்.

Follow Us