முதுமையில் நிதி பாதுகாப்பு.. இளமையில் எப்படி முதலீடு செய்ய வேண்டும்? | TV9 Tamil News

முதுமையில் நிதி பாதுகாப்பு.. இளமையில் எப்படி முதலீடு செய்ய வேண்டும்?

Updated On: 

11 Apr 2026 20:26 PM

 IST

Investment For Retirement | முதுமை காலத்தில் வேலை இருக்காது என்பதால் பண சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தான பலரும் தங்களது முதுமைக்காக சேமிக்க தொடங்குவர். இந்த நிலையில், முதுமை காலத்தை பாதுகாக்க எவ்வாறு முதலீடு செய்வது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 / 5மனிதர்கள் இந்தி பூமியில் வாழும் காலம் முழுவதும் அவர்களுக்கு எப்போதுமே பண தேவை இருந்துக்கொண்டே இருக்கும். இதற்காக தான் பெரும்பாலான மனிதர்கள் வேலைக்கு செல்கின்றனர். வேலைக்கு செல்ல விருப்பம் இல்லாதவர்கள் தொழில் செய்து பணம் சம்பாதிக்கின்றனர்.

மனிதர்கள் இந்தி பூமியில் வாழும் காலம் முழுவதும் அவர்களுக்கு எப்போதுமே பண தேவை இருந்துக்கொண்டே இருக்கும். இதற்காக தான் பெரும்பாலான மனிதர்கள் வேலைக்கு செல்கின்றனர். வேலைக்கு செல்ல விருப்பம் இல்லாதவர்கள் தொழில் செய்து பணம் சம்பாதிக்கின்றனர்.

2 / 5

இளமை காலத்தில் பணத்தை சம்பாதிப்பது என்பது அவ்வளவு கடினமானதாக இருக்காது. காரணம், இளமை காலத்தில் பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.  அதேபோல உழைப்பதற்கும் உடலில் தெம்பு இருக்கும். ஆனால், முதுமை காலத்தில் அப்படி அல்ல. வேலையும் இருக்காது, உழைப்பதற்கான சக்தியும் இருக்காது. 

3 / 5

இந்த நிலையில் தான் முதுமை காலத்தை கருத்தில் கொண்டு சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும் என்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. முதுமை காலத்தில் நிதி சிக்கல்கள் இல்லாமல் வாழ வேண்டும் என்றால் இளமை காலத்திலேயே முதலீடு செய்ய வேண்டும். இளமை காலத்தில் முதலீட்டை தொடங்குவது, நீண்ட ஆண்டுகள் முதலீடு செய்வது முதுமை காலத்தை பாதுகாப்பானதாக வைத்திருக்கும்.

4 / 5

முதுமை காலத்திற்காக முதலீடு செய்யும்போது 110 வயது விதியை கடைபிடிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. அதாவது ஒருவர் தனது 30 வயதில் முதலீடு செய்ய தொடங்குகிறார் என்றால், தனது 110 வயது வரையிலான பாதுகாப்பை உருவாக்கும் வகையில் முதலீடு செய்ய வேண்டும். மேலும் முதலீடு செய்வதற்கான பணத்தில் 80 சதவீதம் பங்குகளிலும், மீதமுள்ள 20 சதவீதத்தை கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யலாம்.

5 / 5

பங்குகளில் நேரடியாக முதலீடு செய்வதற்கு பதிலாக, பங்குச்சந்தை குறியீடு சார்ந்த பரஸ்பர நிதிகள் போன்ற பரவலான முதலீடுகளில் முதலீடு செய்யலாம். உதாரணமாக ஒருவரிடம் ரூ.10,000 உள்ளது என்றால் அதில் ரூ.8,000-த்தை பங்குச்சந்தையிலும், ரூ.2,000-த்தை அரசாங்கத்தின் கடன் பத்திரத்திலும் முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும். 

Follow Us