பிரதமர் மோடிக்கு ராக்கி கட்ட தயாராக இருக்கும் பாகிஸ்தான் பெண்.. 30 ஆண்டுகளாக தொடரும் பாச பந்தம்!
Woman Ties Rakhi to Prime Minister Modi | பாகிஸ்தானை சேர்ந்த கமர் மொஹ்சி என்ற பெண் கடந்த 30 ஆண்டுகளாக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ராக்கி கட்டி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டும் பிரதமர் மோடியின் அழைப்பை எதிர்ப்பார்த்து காத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டும் பெண்
டெல்லி, ஆகஸ்ட் 07 : ஒவ்வொரு ஆண்டும் ராக்கி அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு (Indian Prime Minister Narendra Modi) ராக்கி கட்டும் கமர் மொஹ்சி என்ற பெண் 2025 ஆம் ஆண்டும் பிரதமர் மோடிக்கு ராக்கி கட்ட தயாராக உள்ளதாகவும், அதற்காக பிரதமரின் அழைப்பை எதிர்ப்பார்த்து தான் காத்துக்கொண்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆகஸ்ட் 09, 2025 அன்று ராக்கி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் பிரதமர் மோடி கையில் ராக்கி கட்டுவதற்காக தானே இரண்டு ராக்கிகளை தயார் செய்து வைத்துள்ளதாகவும் அந்த பெண் கூறியுள்ளார். இந்த நிலையில், யார் இந்த கமர் மொஹ்சி அவர் ஏன் ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டுகிறார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்
உடன் பிறந்தவர்களை மரியாதை செய்யும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ராக்கி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சகோதரிகள் தங்களது சகோதரர்களுக்கு ராக்கி கட்டுவது வழக்கம். அப்போது சகோதர்ரகள் ராக்கி கட்டும் தங்களது சகோதரிகளுக்கு பரிசு பொருட்களை வழங்க வேண்டும். இந்த ராக்கி கட்டும் நிகழ்வுக்கு வயது வரம்பு எதுவும் இல்லை. என்ன வயதானாலும் சகோதரிகள் தங்களது சகோதரர்களுக்கு ராக்கி கட்டலாம். இந்த நிலையில், கமர் மொஹ்சி என்ற பெண் ஒவ்வொரு ஆண்டும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ராக்கி கட்டி வருகிறார்.
இதையும் படிங்க : கல்வான் தாக்குதலுக்கு பிறகு, முதன்முறையாக சீனா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி
தொடர்ந்து 30 ஆண்டுகளாக பிரதமருக்கு ராக்கி கட்டும் கமர் மொஹ்சி
கமர் மொஹ்சி என்ற பெண் பாகிஸ்தானை சேர்ந்தவர். 1981-ல் இவருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், திருமணத்திற்கு பிறகு அவர் பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் வசித்து வருகிறார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி மீது கொண்டுள்ள அதிக பற்று காரணமாக அவரை தனது சகோதரராக நினைத்துக்கொண்டு கடந்த 30 ஆண்டுகளாக அவருக்கு ராக்கி கட்டி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டும் அவர் பிரதமருக்கு ராக்கி கட்ட தயாராகி வருகிறார். அதற்காக அவர் தனது கைகளால் செய்யப்பட்ட இரண்டு ராக்கிகளுடன் பிரதமரின் அழைப்புக்காக காத்துக்கொண்டு இருப்பதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க : கூடுதல் வரி விதிப்பேன் என மிரட்டிய டிரம்ப்.. விளக்கம் மூலம் பதிலடி கொடுத்த இந்தியா!
இந்த ஆண்டு ராக்கிக்காக விஷ்னு மற்றும் விநாயகர் வடிவிலான இரண்டு ராக்கிகளை தயார் செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், எந்த ஆண்டும் அவர் ராக்கியை கடைகளிள் வாங்கியது இல்லை என்றும், ஒவ்வொரு ஆண்டும் தானே தனது கைகளால் பிரதமருக்கு ராக்கி செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.