Iran – Israel Conflict : ஈரான் – இஸ்ரேல் மோதல்.. சர்வதேச விமான சேவை பாதிப்பு!

International Flights Service Interrupted | ஈரான் - இஸ்ரேன் இடையே மோதல் நடைபெற்று வரும் நிலையில், அது சர்வதேச விமான சேவையை வெகுவாக பாதித்துள்ளது. குறிப்பாக ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, ஈரான் தனது வான்வழியை மூடியது. இதன் காரணமாக பல்வேறு விமானங்கள் மாற்றி விடப்பட்டன.

Iran - Israel Conflict : ஈரான் - இஸ்ரேல் மோதல்.. சர்வதேச விமான சேவை பாதிப்பு!

மாதிரி புகைப்படம்

Updated On: 

14 Jun 2025 07:56 AM

புதுடெல்லி, ஜூன் 14 : ஈரான் (Iran) மற்றும் இஸ்ரேல் (Israel) இடையே பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில், அதன் காரணமாக சர்வதேச விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது (International Flight Service Affected). குறிப்பாக நேற்று (ஜூன் 13, 2025) ஈரான் தனது வான்வெளியை மூடிய நிலையில், இந்திய விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு மாற்றி விடப்பட்டன. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் பயணிகள் கடும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஈரான் – இஸ்ரேல் மோதல் சர்வதேச விமான சேவையை எவ்வாறு பாதித்துள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரான் – இஸ்ரேல் இடையே தொடந்து நீடித்து வரும் மோதல்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த பல மாதங்களாக தொடர் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மோதலில் ஹமாஸின் முக்கிய தலைவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையே ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து, ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வந்தது. இதற்கு இஸ்ரேலும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடைடே ஈரானின் அணுசக்தி உற்பத்தியை கட்டுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட தொடங்கியது.

ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

ஆனால், அமெரிக்காவின் இந்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் சம்மதம் தெரிவிக்காமல் உள்ளது. இதன் காரணமாக ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, நேற்று (ஜூன் 13, 2025) ஈரானின் தலைநகர், ஏவுகணை தளம் மற்றும் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் மீண்டும் பதட்டம் அதிகரித்துள்ளது.

ஈரான் – இஸ்ரேல் மோதல் – சர்வதேச விமான சேவை பாதிப்பு

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடும் மோதல் நிலவி வரும் நிலையில், சர்வதேச விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்திய நிலையில், நேற்று (ஜூன் 13, 2025) ஈரான் தனது வான்வெளியை மூடியது. இதன் காரணமாக பல்வேறு விமானங்கள் மாற்றி விடப்பட்டடன. குறிப்பாக, லண்டனில் இருந்து மும்பை வந்த விமானம் வியன்னாவுக்கு திருப்பி விடப்பட்டது. நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த விமானம், ஷார்ஜாவுக்கு திருப்பி விடப்பட்டது. இவ்வாறு நேற்றை தினம் மட்டுமே 16 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.