பூமிக்கு திரும்பும் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா.. 14 நாட்கள் ஆராய்ச்சி முடிந்த நிலையில் பயணம்!
Shubhanshu Shukla's 14-Day Space Mission Ends | 14 நாட்கள் விண்வெளி ஆய்வுக்கு சென்றுள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவின் விண்வெளி பயணம் முடிவடையும் நிலையில், அவர் தனது குழுவுடன் நாளை (ஜூலை 14, 2025) பூமிக்கு திரும்புகிறார். அவர்கள் வரும் விண்கலம் ஜூலை 15, 2025 பூமியை வந்தடையும்.

சுபான்ஷூ சுக்லா
டெல்லி, ஜூலை 13 : விண்வெளிக்கு 14 நாட்கள் ஆய்வு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா நாளை (ஜூலை 14, 2025) பூமிக்கு திரும்ப உள்ளார். இவர்களின் ஆராய்ச்சி முடிவடைந்த நிலையில், சுபான்ஷூ சுக்லா மற்றும் அவருடன் விண்வெளிக்கு சென்றுள்ள மேலும் சில விண்வெளி வீரர்களும் பூமிக்கு திரும்ப உள்ளனர். இவர்களின் விண்களம் வட அமெரிக்காவில் உள்ள மேற்கு கடற்கரையில் தரையிறக்க திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை அமெரிக்க அரசு மிக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
விண்வெளிக்கு சென்ற இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 73 வது விண்வெளி குழுவில் இடம் பெற்றுள்ள ஏழு சர்வதேச விண்வெளி வீரர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் ஜூன் 25, 2025 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 14 நாட்கள் பயணமாக இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா மற்றும் பெக்கி விட்சன், திபோர் கபு மற்றும் ஸ்லோவோஸ் ஆகிய நான்கு விண்வெளி வீரர்களும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தங்களது ஆராய்ச்சியை முடித்துக்கொண்டு நாளை (ஜூலை 14, 2025) சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்புகின்றனர்.
இதையும் படிங்க : வேகமாக சுற்றும் பூமி.. இனி 24 மணி நேரம் இருக்காது.. விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
நாளை பகல் 2 மணிக்கு விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும் வீரர்கள்
விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தின் கதவுகள் பகல் 2 மணிக்கு திறக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து சரியாக பகல் 2.25 மணிக்கு இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா மற்றும் மற்ற விண்வெளி வீரர்கள் ஆகியோர் விண்கலத்தில் நுழைய உள்ளனர். அதனை தொடர்ந்து மாலை 4.15 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்கலம் தனியாக பிரிக்கப்பட்டு பிறகு மாலை 4.35 மணிக்கு விண்கலம் பூமியை நோக்கி புறப்பட தயாராகும். சுமார் 24 மணி நேர பயணத்திற்கு பிறகு ஜூலை 15, 2025 பகல் 3 மணி அளவில் விண்கலம் பூமியை வந்தடையும்.
அமெரிக்காவில் தரையிரங்கும் விண்கலம்
சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் பூமியில் தரையிறங்கும் விண்கலம் வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி உள்ள கலிஃபோர்னியாவின் நீண்ட கடற்கரையில் பத்திரமாக தரையிருக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்க கடற்கரை தயார் நிலையில் உள்ளது. விண்வெளி வீரர்கள் பூமிக்கு வருவதை நேரடியாக ஒளிபரப்பு செய்ய நாசாவின் ஆக்சியம் பேஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்கள் தயாராக உள்ளன. இதனை தொடர்ந்து பூமிக்கு வரும் விண்வெளி வீரர்களுக்கு 7 நாட்கள் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.