அரசு பள்ளியில் தடுப்பு இல்லாமல் கட்டப்பட்ட கழிவறை… மாணவர்கள் அதிர்ச்சி
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒவ்வொரு கழிப்பறைக்கும் இடையே தடுப்பு சுவர்கள் இல்லாமல் இருந்தது. இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது சம்பந்தமான புகைப்படங்கள் சோஷியல் மீடியால் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர், அக்டோபர் 08 : தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.34 லட்சம் மதிப்பில் இரண்டு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதனை 2025 அக்டோபர் 7ஆம் தேதியான நேற்று ஆடுதுறை பேரூராட்சி சேர்மன் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கழிப்பறையை திறந்து வைத்த உடனே பார்வையிட்ட அதிகாரிகள், அங்கு ஒவ்வொரு கழிப்பறைக்கும் இடையே தடுப்பு சுவர்கள் இல்லாமல் இருந்தது. இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Published on: Oct 08, 2025 12:38 PM