டெல்லி போராட்டத்தில் ராகுல்காந்தி கைது.. தமிழக காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்!
போலி வாக்காளர்கள் கொண்ட பட்டியலை ராகுல்காந்தி வெளியிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தையும், மத்திய பாஜக அரசையும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மழுப்பலான பதிலை கொடுத்துள்ளது. இதனை கண்டித்து டெல்லியில் நடந்த போராட்டத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எம்பிக்கள் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.