ACE Pro-வுக்கான கனவு இதுதான்.. Tata மோட்டார்ஸ் வணிக தலைவர் பினாகி ஹால்தார் சொல்லும் விஷயம்
Tata மோட்டார்ஸ் வணிக வாகனங்களின் துணைத் தலைவர் மற்றும் வணிகத் தலைவரான பினாகி ஹால்தார், இந்தியாவின் தொழில்முனைவோர் பயணத்தை உயர்த்தும் வகையில் ACE Pro உருவாக்கப்பட்டுள்ளது எனப் பகிர்ந்துகொள்கிறார். மேலும் தெரிவித்த அவர், இது பாதுகாப்பு, புதுமை மற்றும் நம்பிக்கைக்குரிய செயல்திறனை அடிப்படையாகக் கொண்டது.
இருபதுக்கும் மேலான ஆண்டுகளாக, Tata மோட்டார்ஸ் வணிக வாகனங்கள் துறையில் சிறு வியாபாரங்களை வலுப்படுத்தும் நம்பகமான மொபிலிட்டி தீர்வுகளை வழங்கி வருகிறது. துணைத் தலைவர் மற்றும் வணிகத் தலைவர் (SCV & Pickup), பினாகி ஹால்தார், இந்தப் பயணத்தையும், அதன் வளர்ச்சியின் அடுத்த படியாக அறிமுகமான புதிய ACE Pro பற்றியும் பகிர்கிறார். இது குறித்து பேசிய அவர், “வாடிக்கையாளர்களின் தொழில்முனைவோர் கனவுகளை ஆதரிக்கும் வகையில் நம்பகத்தன்மையும் செயல்திறனும் கொண்ட தீர்வுகளை வழங்குவதுதான் எங்களது தொடர்ந்து நிலைத்த இலக்கு. புதிய வியாபாரத்தை தொடங்க விரும்பும் ஒருவர் அல்லது தங்களது ஃப்ளீட்டை விரிவுபடுத்த விரும்பும் உரிமையாளர் — யார் இருந்தாலும், ACE Pro என்பது மதிப்பு, செயல்திறன் மற்றும் மன நிம்மதியைக் கொண்டு வரக்கூடிய வாகனம்.” என்றார்
Published on: Jul 09, 2025 05:10 PM
Latest Videos