கோலகலமாக தொடங்கிய பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரை.. சிறப்பம்சம் என்ன?
மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரை இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இந்த ரத யாத்திரை ஸ்ரீ குண்டிச்சா ரத யாத்திரை எனவும் அழைக்கப்படுகிறது. இந்து பண்டிகைகளில் மிகவும் முக்கியமான பண்டியாக இது கருதப்படுகிறது. இன்று தொடங்கிய இந்த பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் கலந்துக்கொள்ள ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரை இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இந்த ரத யாத்திரை ஸ்ரீ குண்டிச்சா ரத யாத்திரை எனவும் அழைக்கப்படுகிறது. இந்து பண்டிகைகளில் மிகவும் முக்கியமான பண்டியாக இது கருதப்படுகிறது. இன்று தொடங்கிய இந்த பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் கலந்துக்கொள்ள ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். ஜெகந்நாதர், பாலபத்ரர் மற்றும் தேவி சுபத்ரா ஆகியோரின் மூன்று பிரமாண்டமான மர ரதங்கள் ஆயிரக்கணக்கான பக்தர்களால் சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள குண்டிச்சா கோயிலுக்கு இழுத்து செல்வார்கள். இதனால் அப்பகுதி முழுவதும் விழா கோலம் பூண்டுள்ளது.