கரூரில் விரைவில் புதிய பேருந்து நிலையம் திறப்பு.. செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு..!

Jun 21, 2025 | 11:35 PM

கரூரை அடுத்த திருமாநிலையூரில் 40 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். கட்டுமான பணிகள் மற்றும் கட்டடங்களில் தரம் குறித்த ஆய்வு செய்த செந்தில் பாலாஜி, அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கரூரில் அமைந்து வரும் புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைப்பார்” என தெரிவித்தார்.