தூத்துக்குடியில் குவியும் அரிய வகை கருந்தலை நாரை.. கண்டு ரசிக்கும் பொதுமக்கள்..
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உப்பள பகுதிகளில் அரிய வகை பறவையான கருந்தலை நாரை (Black-headed Ibis) அதிக எண்ணிக்கையில் காணப்படுவது பறவைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. சமீப நாட்களில் பெய்து வரும் அதிக மழையால் உப்பள பகுதிகளில் சிறிய மீன்கள், நீர்வாழ் பூச்சிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அதிகளவில் கிடைக்கத் தொடங்கியுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உப்பள பகுதிகளில் அரிய வகை பறவையான கருந்தலை நாரை (Black-headed Ibis) அதிக எண்ணிக்கையில் காணப்படுவது பறவைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. சமீப நாட்களில் பெய்து வரும் அதிக மழையால் உப்பள பகுதிகளில் சிறிய மீன்கள், நீர்வாழ் பூச்சிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அதிகளவில் கிடைக்கத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக, ஈரநில வாழ்விடங்களை விரும்பும் கருந்தலை நாரைகள் குழுக்களாக இப்பகுதிகளுக்கு வந்து உணவு தேடும் காட்சிகள் பரவலாக காணப்படுகின்றன.