மதவெறிப் போக்கை இந்த நாடு ஒருபோதும் மறக்காது.. காங்கிரஸ் தலைவரை சாடியய சி.ஆர்.கேசவன்!
காங்கிரஸ் தலைவர் நானா படோலின் அறிக்கை குறித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.கேசவன் கூறுகையில், "கடவுள் ராமரை ராகுல் காந்தியுடன் ஒப்பிட்டு நானா படோல் கூறிய மிகவும் ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள், கோடிக்கணக்கான இந்து பக்தர்களின் உணர்வுகளையும் நம்பிக்கையையும் கடுமையாகப் புண்படுத்தி, பெரும் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளன. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்று வந்த மறுநாளே, அந்தக் கோயிலைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்று கூறி அவர் இழிவான கருத்துக்களைத் தெரிவித்த அந்த மதவெறிப் போக்கை இந்த நாடு ஒருபோதும் மறக்காது." என்றார்.
காங்கிரஸ் தலைவர் நானா படோலின் அறிக்கை குறித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.கேசவன் கூறுகையில், “கடவுள் ராமரை ராகுல் காந்தியுடன் ஒப்பிட்டு நானா படோல் கூறிய மிகவும் ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள், கோடிக்கணக்கான இந்து பக்தர்களின் உணர்வுகளையும் நம்பிக்கையையும் கடுமையாகப் புண்படுத்தி, பெரும் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளன. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்று வந்த மறுநாளே, அந்தக் கோயிலைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்று கூறி அவர் இழிவான கருத்துக்களைத் தெரிவித்த அந்த மதவெறிப் போக்கை இந்த நாடு ஒருபோதும் மறக்காது. அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இறைவன் ராமர் இருந்ததற்கு வரலாற்று ஆதாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதானே?” என்று தெரிவித்தார்.