திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்.. பாஜகவினர் போராட்டம்

Dec 19, 2025 | 1:09 PM

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னை நீதிமன்றத்தில் இருக்கிறது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், டிசம்பர் 18ம் அதேதி மதுரையைச் சேர்ந்த பூர்ணசந்திரன் என்ற இளைஞர் மதுரை மாநகர் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள போலிஸ் பூத்திற்குள் சென்று பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னை நீதிமன்றத்தில் இருக்கிறது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், டிசம்பர் 18ம் அதேதி மதுரையைச் சேர்ந்த பூர்ணசந்திரன் என்ற இளைஞர் மதுரை மாநகர் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள போலிஸ் பூத்திற்குள் சென்று பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து இளைஞரின் உயிரிழப்புக்கு நியாயம் வேண்டி தமிழக பாஜகவினர் இன்று போராட்டம் நடத்தினர்